முகப்பு /செய்தி /சென்னை / ஒருமுறை பாதித்தவர்களை மீண்டும் 'மெட்ராஸ் ஐ' பாதிக்குமா? - கண் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்!

ஒருமுறை பாதித்தவர்களை மீண்டும் 'மெட்ராஸ் ஐ' பாதிக்குமா? - கண் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்!

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

Madras Eye : தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒருவருக்கு ஒருமுறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அந்த பாதிப்பு வருவதற்கான வாய்ப்புள்ளதாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு முழுவதும் தினசரி 4 ஆயிரம் முதல் 4 ஆயிரத்து 500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு ஆளாவதாக கூறினார். குறிப்பாக சென்னையில் தினமும் 10 முதல் 100 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.

இதற்கிடையே, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் பிரகாஷ், “ஒருவருக்கு ஒருமுறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மீண்டும் அந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவுதான்” என கூறினார்.

இதையும் படிங்க : மழை காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ - வந்தால் என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில், 5 முதல் 10 சதவீதம் மக்களுக்கு 2வது முறை மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண் அறுவை சிகிச்சை நிபுணர் கவுசிக் தெரிவித்தார். மேலும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

' isDesktop="true" id="841774" youtubeid="8sSDc1AyifE" category="chennai">

தமிழ்நாடு முழுவதும் மெட்ராஸ் ஐ பாதிப்பு குறித்த சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதால் மக்கள் அனைவரும் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே மருத்துவ வல்லுநர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

First published:

Tags: Madras Eye, Minister Ma.Subramanian, Tamilnadu