ஹோம் /நியூஸ் /சென்னை /

'ஒரு நாளைக்கு 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ வருது.. ஜாக்கிரதையா இருங்க' - அமைச்சர் எச்சரிக்கை

'ஒரு நாளைக்கு 4500 பேருக்கு மெட்ராஸ் ஐ வருது.. ஜாக்கிரதையா இருங்க' - அமைச்சர் எச்சரிக்கை

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ

சென்னையில் நாள்தோறும் 80 முதல் 100 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சேலம், தருமபுரி மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாட்டில் தினந்தோறும் 4,000 முதல் 4,500 பேருக்கு, மெட்ராஸ் ‘ஐ’ நோய் பாதிப்பு அறியப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  வடகிழக்கு பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மெட்ராஸ் ‘ஐ’ பரவலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

  சென்னையில் நாள்தோறும் 80 முதல் 100 பேருக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், சேலம், தருமபுரி மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். வடகிழுக்கு மழைக்கு பின் மட்டும் 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இதில் யாருக்கும் பார்வை இழப்பு ஏற்படவில்லை எனவும் கூறினார்.

  மழை காலங்களில் அதிகம் பரவும் மெட்ராஸ் ஐ - வந்தால் என்ன செய்ய வேண்டும்?

  தமிழ்நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரி, மாவட்ட அரசு மருத்துவமனை, ஒருசில வட்டார மருத்துவமனை என 90 இடங்களில் கண் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

  பாட்டி வைத்தியத்தை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்ட அமைச்சர், கண் நோய் பாதித்தால் கட்டாயம் மருத்துவர்களை அணுக வேண்டுமென்றார். மெட்ராஸ் ஐ-க்கான மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Ma subramanian, Madras Eye