முகப்பு /செய்தி /சென்னை / திடீரென மயங்கி விழுந்த கவுன்சிலர்... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு

திடீரென மயங்கி விழுந்த கவுன்சிலர்... சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் பரபரப்பு

மாமன்ற கூட்டத்தில் மயக்கமடைந்த உறுப்பினர்

மாமன்ற கூட்டத்தில் மயக்கமடைந்த உறுப்பினர்

Chennai Corporation Meeting | மயக்கம் அடைந்த அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெற்ற போது, மாமன்ற உறுப்பினர் ஒருவர் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. மதியம் 2 மணி அளவில்கூட்டத்தில் பங்கேற்ற 14வது வார்டு திமுக மன்ற உறுப்பினர் பானுமதி திடீரென மயக்கம் அடைந்தார். மேயர், ஆணையர் உடனடியாக அவரச ஊர்தியை வரவழைத்தனர்.

இதனை தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் அவரை அவசர ஊர்திக்கு தூக்கி சென்றனர். செவிலியர் ஒருவர் மூலம் உடனடியாக முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. மயக்கம் அடைந்த அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாமன்ற உறுப்பினரை மேயர் பிரியா மருத்துவமனை சென்று நலம் விசாரித்தார்.

First published:

Tags: Chennai corporation, Mayor Priya