முகப்பு /செய்தி /சென்னை / சென்னையில் தனியார் பேருந்துகள்... போராட்டம் அறிவித்த தொமுச..!

சென்னையில் தனியார் பேருந்துகள்... போராட்டம் அறிவித்த தொமுச..!

மாதிரி படம்

மாதிரி படம்

LPF Protest | அனைத்து சங்கத்தினரையும் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தொமுச அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக சென்னையில் 625 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 436 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி 29 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் அவற்றிற்கு உரிய இழப்பீடு அரசு தரப்பில் வழங்கும் விதமாக கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட்( Gross Cost Contract) என்ற முறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இயக்க முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பயணிக்கும் பயணிகளின் சேவையை விரிவுபடுத்துவதற்காக இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதைக் கண்டித்து மாநகர போக்குவரத்து கழகத்தில் அனைத்து பணிமனைகளிலும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தொமுச அறிவித்துள்ளது. மேலும் னைத்து சங்கங்களையும் திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்  எனவும் தொமுச அறிவித்துள்ளது.

First published:

Tags: Chennai, MTC