முகப்பு /செய்தி /சென்னை / சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!

சென்னை: ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி.. பலத்த காயத்துடன் உயிருக்கு போராடும் காதலன்!

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி விபரீத முடிவு

ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி விபரீத முடிவு

இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் வாலிபர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ரயில் முன் விழுந்து காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்த பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் முன் காதல் ஜோடி விழுந்தனர். இதில் சுமார் 19 வயது மதிக்கத்தக்க இளம் பெண் தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தில் பலியானார். வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டு இருந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டு இருந்த வாலிபரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பலியான பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் மற்றும் போலீசார் பலியான பெண் மற்றும் உயிருக்கு போராடும் வாலிபர் யார் என விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த இளைஞர் மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ (வயது-20) என்பதும் இவர் ஜெயின் கல்லூரியில் மூன்றாம் ஆண்டுபடித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த பெண் ஐஸ்வர்யா‌ என்பதும் அவர் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


First published:

Tags: Crime News, Lovers, Sucide