ஹோம் /நியூஸ் /Chennai /

ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது

ரயில் நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது

திருட்டில் ஈடுபட்ட காதலர்கள் கைது

திருட்டில் ஈடுபட்ட காதலர்கள் கைது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிக்கடி மொபைல் போன்கள் திருடு போவதாக வந்த புகார்களை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார் அதன் அடிப்படையில் காதல் ஜோடியை கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.

  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மேற்கு மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எப்போதும் இந்த ரயில் நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.  ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே உறங்குவதும் உண்டு. இவ்வாறு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகள், செல்போன் சார்ஜ் போட்டிருக்கும் பயணிகளின் செல்போன்கள் திருடு போய் வந்தது.

  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிக்கடி மொபைல் போன்கள் திருடு போவதாக வந்த புகார்களை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

  மேலும் படிக்க: அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  ஆவடியை சேர்ந்த ஜெயஸ்ரீ(21) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன் (23)ஆகிய இருவரும்  காதலர்கள் ஆவர். இவர்கள் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு அதனை விற்று ஜாலியாக ஊர் சுற்றி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Mobile phone, Theft