ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னை அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலி.. தண்டவாளத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பரிதாபம்..!

சென்னை அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலி.. தண்டவாளத்தில் பேசிக்கொண்டிருந்தபோது பரிதாபம்..!

ரயில் மோதி உயிரிழந்த காதல் ஜோடி

ரயில் மோதி உயிரிழந்த காதல் ஜோடி

Tambaram | ரயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tambaram, India

சென்னையை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் அருகே ரயில் மோதி காதல் ஜோடி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் (24). செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் நண்பர்களுடன் வாடகைக்கு வீட்டில் தங்கி, மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரும், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஷெர்லின் (20) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம்போல் அலெக்ஸ், ஷெர்லின் அகிய இருவரும் பேசிக்கொண்டிருந்தாகவும், அப்போது வழியாக வந்த மின்சார ரயில் இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

Also see... ரயில் பிளாட்பாரத்தில் சிக்கிய மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்

இது குறித்த தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் காதல் ஜோடிகளின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் உயிரிழந்தது விபத்தா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்: ராபர்ட் எபினேசர், செங்கல்பட்டு

First published:

Tags: Accidents, Lovers, Tambaram, Train