ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் பைக் மீது லாரி மோதி விபத்து... 2 கால்களை இழந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

சென்னையில் பைக் மீது லாரி மோதி விபத்து... 2 கால்களை இழந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு...!

சாலை விபத்து

சாலை விபத்து

சென்னையில் கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில், இரு கால்களை இழந்த இளம்பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையை அடுத்த மாங்காடு அம்பாள் நகர் பகுதியை சேர்ந்த தோழிகளான நித்யா மற்றும் ரோஹிணி அம்பத்தூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவரும், வழக்கம் போல் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு, ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். வானகரம் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நித்யாவின் மீது லாரி டயர் ஏறி இறங்கியதில், அவரின் இரு கால்களும் துண்டாகின. பின்னால், அமர்ந்து வந்த ரோஹிணிக்கு ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு நித்யாவின் இரண்டு கால்களும் அகற்றப்பட்டன. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி நித்யா பரிதாபமாக உயிரிழந்தார். ரோஹிணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது-

இதனிடையே, விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மோகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பூந்தமல்லி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுவதால், சாலையின் பல இடங்களில் சாலை மேடு பள்ளமாக உள்ளது. இதனால், கடந்த இரு மாதங்களில் மட்டும் வானகரம் முதல் வேலப்பன்சாவடி வரையில் உள்ள சாலையில் நிகழ்ந்த விபத்துகளில் 8 பேர் உயிரிழந்தனர். எனவே, உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

First published:

Tags: Bike, Chennai, Dead, Road accident