ஹோம் /நியூஸ் /சென்னை /

பகீர் விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி.. திக் திக் நொடியில் தப்பித்த ஓட்டுநர்!

பகீர் விபத்து.. அந்தரத்தில் தொங்கிய லாரி.. திக் திக் நொடியில் தப்பித்த ஓட்டுநர்!

விபத்துக்குள்ளான லாரி

விபத்துக்குள்ளான லாரி

விபத்து ஏற்பட்டதில் சுவர் இடிந்து லாரி அந்தரத்தில் தொங்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை எண்ணூர் அருகே மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி, அந்தரத்தில் தொங்கிய லாரியில் இருந்த ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

எண்ணூர் துறைமுகத்தில் இருந்து ரகித்பாஷா என்பவர் கண்டெய்னர் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். கத்திவாக்கம் அருகே கொசஸ்தலை ஆற்றின் மேம்பாலம் வழியாக சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து லாரி அந்தரத்தில் தொங்கியது. தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், பெரிய ஏணியை பயன்படுத்தி, லாரி ஓட்டுநர் ரகித்பாஷாவை பத்திரமாக மீட்டனர்.

பின்னர், கிரேன் உதவியுடன் அந்தரத்தில் தொங்கிய லாரி பாலத்தில் இருந்து அகற்றப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: Chennai