சென்னை தி.நகரில், 7ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தி.நகர் பகுதியில் 29 வயது ஆசிரியை ஒருவர், தன்னிடம் ட்யூஷன் படித்து வந்த 7ஆம் வகுப்பு சிறுமியை தனது காதலருடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை ஆசிரியையின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுமியை மிரட்டி, ஆசிரியை தங்க நகை மற்றும் பணம் பெற்று வந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர், தி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, டியூசன் ஆசிரியை மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: மனைவிக்கு தெரியாமல் சொந்த நிறுவனத்தில் ரூ.4 கோடி திருடிய கணவர்.. கணக்காளருடன் கைது
இதுதொடர்பான வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம். ராஜலெட்சுமி முன் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச்சாட்டுகள் நிரூபணமாவதாக கூறி, இளம் பெண் மற்றும் அவரது காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் டியூஷன் ஆசிரியைக்கு 70 ஆயிரம் ரூபாயும், காதலருக்கு 60 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pocso, Sexual harassment