ஹோம் /நியூஸ் /சென்னை /

காவி(ய) தலைவன் அம்பேத்கர்! இந்துமக்கள் கட்சி ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு... நீதிமன்றம் வந்த அர்ஜூன் சம்பத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு

காவி(ய) தலைவன் அம்பேத்கர்! இந்துமக்கள் கட்சி ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு... நீதிமன்றம் வந்த அர்ஜூன் சம்பத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு

அம்பேத்கர் போஸ்டர் - அர்ஜூன் சம்பத்

அம்பேத்கர் போஸ்டர் - அர்ஜூன் சம்பத்

அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டியதற்கு கண்டங்களை தெரிவித்ததுடன், அர்ஜூன் சம்பத் மற்றும் சங்க் பரிவார் அமைப்புகளுக்கு எதிரான கோஷங்களை வழக்கறிஞர்கள் எழுப்பினர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

டாக்டர் அம்பேத்கரை காவி(ய) தலைவன் என குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டிய இந்துமக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து அவரை வெளியேற்றினர்.

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்து மக்கள் கட்சி தரப்பில் காவி உடை அணிந்து, விபூதி குங்குமம் வைத்து இருப்பது போன்ற சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கு கடும் கண்டன குரல்கள் எழும்பி வரும் நிலையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கோரி அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த அவர் அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த முயற்சித்துள்ளார்.

இதையும் படிக்க :  காவி உடையில் அம்பேத்கர்.. சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது!

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை தடுத்தனர். பின்னர், அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டி ஒட்டியதற்கு கண்டங்களை தெரிவித்ததுடன், அர்ஜூன் சம்பத் மற்றும் சங்க் பரிவார் அமைப்புகளுக்கு எதிரான கோஷங்களை வழக்கறிஞர்கள் எழுப்பினர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அம்பேத்கர் சிலை முன்பு அர்ஜுன் சம்பத் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அர்ஜுன் சம்பத்துக்கு எதிராக ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியதால் அவரை வலுக்கட்டாயமாக  காவல்துறையினர் நீதிமன்றத்துக்கு வெளியே மீட்டு சென்றனர்.

அம்பேத்கர் சிலை இருந்த  பகுதியில் இருந்து கோஷங்களை எழுப்பியபடியே, அர்ஜூன் சம்பத் வெளியேறும்படி நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் அவரை  பின் தொடர்ந்து வந்தனர். சிலர் அவரை தாக்கவும் முயற்சித்தனர். அப்போது, வழக்கில் ஆஜராக அனுமதி சீட்டு பெற்று வந்துள்ள தன்னை ஏன் வெளியேற்றுகிறார்கள் என காவல்துறையினரிடம் அர்ஜூன் சம்பத் முறையிட்டார்.

பின்னர், அம்பேத்கர் சிலையிலிருந்து என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள பார் கவுன்சில் கட்டிடம் வரை இந்து மக்கள் கட்சிக்கு எதிராகவும், அந்த சம்பத்துக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பிய வழக்கறிஞர்கள், அர்ஜுன் சம்பத் கிளம்பிய பின்னர் கலைந்து சென்றனர்.

First published:

Tags: Ambedkar, Arjun Sampath, Chennai High court