தான் ஒரு இசையமைப்பாளர் என்பதை நிரூபிக்கும் விதமாக பெண் ஒருவருக்கு பாடல் பாடியே மிரட்டல் விட்டு தொத்தரவு செய்தவர் தான் சபேஷ் சாலமன். எங்க போனாலும் என்ன ஒன்னும் பண்ணமுடியாது என்று கெத்தாக பேசியவர் தலைமறைவாக உள்ளார்.
சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில் தானும், தன் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும் அப்போது கானா பாடல் ஆல்பம் இசையமைப்பாளரான சபேஷ் சாலமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அன்பாக, ஆறுதலாக பேசிய சாலமன் உடனான நட்பு, ஒருகட்டத்தில் தனிமையில் இருக்கும் அளவிற்கு நெருக்கமான நட்பாகவும் வளர்ந்துள்ளது. இந்நிலையில் தனிமையில் இருக்கும் ஆபாச படங்களை சாலமன் தனது செல்போனில் எடுத்துவைத்திருந்ததாக தெரிகின்றது. ஒருகட்டத்தில் கானா இசையமைப்பாளர் சபேஷ் சாலமன் உடல்ரீதியாகவும் ,மன ரீதியாகவும் தொந்தரவு கொடுக்க தொடங்கியுள்ளார்.
இதையடுத்து அவரது நட்பை முறித்துக்கொண்ட பெண் தனது கணவருடன் சமாதானம் ஏற்பட்டு சேர்ந்து வாழ தொடங்கியுள்ளார். ஆனாலும் விடாத சாலமன் மீண்டும் பெண்ணுக்கு செல்போன் மூலமாக தொந்தரவு கொடுக்க தொடங்கியுள்ளார். அத்துடன் பெண்ணுடன் தனிமையில் இருக்கும் போது எடுத்த ஆபாச புகைப்படங்களை பெண்ணின் கணவர் உள்ளிட்ட உறவினர்களுக்கு வாட்சப் மூலமாக அனுப்பியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் சாலமன் நடத்திவரும் யூடியூப் பக்கத்திலும் அந்த ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் இதுபற்றி சாலமனிடம் கேட்ட போது என் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லை என்றால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். மிரட்டலையும் பாடலாக பாடி பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். சாலமன் பற்றி அவரது தந்தையிடம் புகார் தெரிவித்ததாகவும் ஆனால் அவரும் உடன் சேர்ந்து தன்னை மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
Must Read : பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்.. கருகலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழப்பு
பெண்ணின் புகாரை பெற்றுள்ள போலீசார் தலைமறைவாக உள்ள கானா இசையமைப்பாளர் சபேஷ் சாலமனை தேடி வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.