Home /News /chennai /

சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைப் பொருளாக பயன்படுத்திய கும்பல் கைது…

சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைப் பொருளாக பயன்படுத்திய கும்பல் கைது…

கைது செய்யப்பட்ட அஜய், மௌலிதரன், அஜித்.

கைது செய்யப்பட்ட அஜய், மௌலிதரன், அஜித்.

சென்னையில் பிரசவ வலி மாத்திரையை போதைப் பொருளாக பயன்படுத்திய கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சென்னை சூளைமேடு பகுதிகளில் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சூளைமேட்டைசேர்ந்த மெக்கானிக் அஜித் என்பவரை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் பெண்களுக்கு பிரசவ வலியின் போது கொடுக்கப்படும்  மாத்திரையை போதைக்காக பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

அஜித்துக்கு இந்த மாத்திரையை கொடுத்ததாக மௌலிதரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், மௌலிதரனுக்கு மாதவரத்தை சேர்ந்த அஜய் எட்வர்டு பிளிக்ஸ் என்பவர் கொடுத்தது தெரியவந்தது.

விழுப்புரம் அருகே கடையிலிருந்து 7 பழங்கால உலோக சிலைகள் மீட்பு

இதனைத் தொடர்ந்து அஜய் எட்வர்டு பிளிக்ஸை கைது செய்து நடத்திய விசாரணையில், மதுரையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கிரிமினாலஜி படித்து முடித்தவர் என்றும், காவல்துறையில் வேலை பார்க்க வேண்டும் என்ற கனவோடு அவர் சென்னைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மாதவரத்தில் இவரது தந்தை இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் நடத்தி வந்திருக்கிறார். தந்தையின் கம்ப்யூட்டர் சென்டர் கடையை கவனித்து வந்த போது இணையதளம் மூலமாக போதை மாத்திரை விற்கும் கும்பலோடு தொடர்பு கிடைத்திருக்கிறது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

அதன் பின்பு இணையதளம் மூலமாகவே பிரசவ வலிக்கு பயன்படுத்தக்கூடிய நைட்ரோவேட் மாத்திரையை பீகாரில் இருந்து கொரியர் மூலமாக சென்னை வரவழைத்து, சென்னையிலிருந்து மதுரைக்கும் விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மூவரிடமும் சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடமிருந்து 1660 நைட்ரோவேட் மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Published by:Musthak
First published:

Tags: Crime News

அடுத்த செய்தி