Home /News /chennai /

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்ற மோடியால் சொல்ல முடியுமா - தங்கபாலு விமர்சனம்

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்ற மோடியால் சொல்ல முடியுமா - தங்கபாலு விமர்சனம்

கே.வி. தங்கபாலு

கே.வி. தங்கபாலு

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தது தொடர்பான கேள்விக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு ‘ரஜினி நல்ல நடிகர்’ என்று கூறி பதிலளித்துப் பேசினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபயணம் மற்றும் பாஜகவை கண்டித்து பிரச்சார பயணம் இன்று முதல் நாடு முழுவதும் தொடங்கி நடைபெற உள்ளது. அதன் ஒரு கட்டமாக, சென்னை சாந்தோமில் தென் சென்னை காங்கிரஸ் சார்பில் பிரசார நடைபயணம் தொடங்கியது.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஸை விமர்சித்து கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.வி.தங்கபாலு, சுதந்திரத்திற்கு எதிராக போராடியவர்கள் சாவர்கர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர், வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக துணையாக, இந்திய மக்களுக்கு எதிராக நின்றவர்கள் அவர்கள் என்று குற்றம்சாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் தேசிய கொடியை ஏற்றுவதில்லை என அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். பிரதமர் மோடி அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என சொல்கிறார். ஆனால் அவரால் ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி வைக்க வேண்டும் என சொல்ல முடியாது கூறினார். ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கட்டுப்பட்டவர்தான் பிரதமர் மோடி என விமர்சித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து தொடர்பான கேள்விக்கு, அவர் நல்ல நடிகர், நல்ல நண்பர் யாரை வேண்டுமானாலும் அவர் சந்திக்கட்டும் அது அவரது விருப்பம் அவருக்கு வாழ்த்துகள் என கூறினார். ஆனால், தமிழகத்தில் பாஜகவால் வளரமுடியாது என்று கூறிய தங்கபாலு, ஏனென்றால் இது பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி ஆகியோர்கள் வரலாறு படத்தை மண் என்று கூறினார்.

தேசியத்திற்கும் தமிழ் உணர்வுக்கும் எதிரானவர்கள் பாஜகவினர் என விமர்சித்த தங்கபாலு, பாஜகவினர் எத்தனை முறை திருக்குறளை சொன்னாலும், தமிழகத்தில் அவர்களால் வளர முடியாது என்பதே நிதர்சனமான உண்மை என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எட்டு வழி சாலை திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, சேலம்-சென்னை இடையான 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்க மாட்டார் என தாம் நம்புவதாக பதிலளித்தார்.

Must Read : பள்ளி மாணவியை கடத்த முயன்ற மர்மநபர்கள்.. அதிர்ச்சியில் ஷேர் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி..! - பட்டப்பகலில் துணிகரம்

சென்னை சேலம் இடையான 8 வழி சாலை திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதி வழங்க மாட்டார் என தாம் நம்புவதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலு தெரிவித்துள்ளார்.
Published by:Suresh V
First published:

Tags: BJP, Congress, Rajinikanth, RN Ravi, RSS, Tamil Nadu Governor

அடுத்த செய்தி