ஹோம் /நியூஸ் /சென்னை /

வரத்து அதிகம்.. சர்ரென குறைந்த காய்கறிகளின் விலை.. கோயம்பேடு சந்தையில் விலை நிலவரம்!

வரத்து அதிகம்.. சர்ரென குறைந்த காய்கறிகளின் விலை.. கோயம்பேடு சந்தையில் விலை நிலவரம்!

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் சரிவு

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடும் சரிவு

Koyambedu Market: இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை கடும் சரிவு அடைந்துள்ளது. நாட்டு தக்காளி 25 லிருந்து 15 ரூபாய்க்கும் நவீன் தக்காளி30 இருந்து 25 ரூபாய்க்கும். சின்னவெங்காயம் 120 லிருந்து 100 ரூபாய்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இதர காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது.

  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 10 நாட்களாக காய் கறிகளின் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில்.  கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தங்கு தடையின்றி வரத்து அதிகரிப்பால் அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது.

  தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் லாரிகள் மூலம் அனைத்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 650 வாகனங்களில் இருந்து 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன.

  1 கிலோ காய்கறிகளின் விலை நிலவரம் (10.11.2022)

  கேரட் 60 லிருந்து 30 ரூபாய்க்கும்

  பீன்ஸ் 80 லிருந்து 30 ரூபாய்க்கும்

  கத்திரிக்காய் 30 லிருந்து 12,15 ரூபாய்க்கும்

  அவரக்காய் 40 லிருந்து 30 ரூபாய்க்கும்

  ஊதா கத்திரிக்காய் 20லிருந்து 12,15 ரூபாய்க்கும்

  புடலங்காய் 30 லிருந்து20,15 ரூபாய்க்கும்

  பாவக்காய் 40 லிருந்து 30 ரூபாய்க்கும்

  கோவைக்காய் 20லிருந்து 18,15 ரூபாய்க்கும்

  காலிபிளவர் 250 லிருந்து 15 ரூபாய்க்கும்

  முட்டைக்கோஸ் 20 லிருந்து 15 ரூபாய்க்கும்

  முருங்கைகாய் 120 லிருந்து 80 ரூபாய்க்கும்

  வெண்டைக்காய் 30லிருந்து15,12ரூபாய்க்கும்

  சவ்சவ் 25 லிருந்து 10,12 ரூபாய்க்கும்

  முள்ளங்கி 25லிருந்து 08,10 ரூபாய்க்கும்

  பீரக்கங்காய் 30 லிருந்து 25 ரூபாய்க்கும்

  எலுமிச்சை 90 லிருந்து 40,50 ரூபாய்க்கும்

  நூக்கல் 25 லிருந்து 15 ரூபாய்க்கும்

  பச்சைமிளகாய் 45 லிருந்து 30 ரூபாய்க்கும்

  கொத்தமல்லி 2 ரூபாய்க்கும்

  புதினா 2 ரூபாய்க்கும்

  கீரை வகைகள் 15-க்கும்.

  கருவேப்பிலை 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  கோயம்பேடு சிறு மொத்த சங்க தலைவர் எஸ் எஸ் முத்துகுமார் அவர்கள் கூறுகையில்,” ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட்ட மாவட்டங்களில் மழையானது விட்டு விட்டு பெய்து வருவதாலும் தங்கு தடையின்றி வரத்து அதிகரிப்பால். கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் அனைத்து காய்கறிகளின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை புறநகர் சிறு வியாபாரிகள் மற்றும் இல்லதரிகள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை வாங்கி சென்றனர்.

  Also see...திருவாரூர் டூ சென்னை.. 3 மணி நேரத்தில் பறந்து வந்த உடல் உறுப்புகள்.!

  அதே போல் அனைத்து இடத்திலும் மழை பெய்து வந்தாலும் அனைத்து காய்கறிகளும் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் வருவதாக கூறினார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Chennai Rain, Koyambedu, Vegetable price