ஹோம் /நியூஸ் /சென்னை /

சரசரனு சரிந்த காய்கறி விலை.. தக்காளி, வெங்காயம் விலை இதுதான்.. மொத்த லிஸ்ட்!

சரசரனு சரிந்த காய்கறி விலை.. தக்காளி, வெங்காயம் விலை இதுதான்.. மொத்த லிஸ்ட்!

கோயம்பேடு மார்கெட்

கோயம்பேடு மார்கெட்

கிறிஸ்துமஸ் மற்றும் நள்ளிரவு பெய்த மழை காரணமாக காய்கறி வியாபாரம் குறைந்ததால் வியாபாரிகள் வருத்தமடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

கடுமையாக விலை ஏறிய கேரட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சென்னையில் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென சரிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோயம்பேடு காய்கறி சந்தையில் வழக்கத்தை விட வரத்து அதிகரித்ததாலும், கிறிஸ்துமஸ் மற்றும் நள்ளிரவு பெய்த மழை காரணமாக வியாபாரம் குறைந்ததால் அனைத்து அத்தியாவசிய காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.

கேரட், பீட்ரூட் ஆகியவை ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முள்ளங்கி, சவ்சவ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட காய்கறிகள் 7 முதல் 15 ரூபாய்க்கும் விற்பனையானது.ஆந்திர வெங்காயம் கிலோ 14 ரூபாய்க்கும், நாட்டுதக்காளி கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ.1000-க்கு பதிலாக ரூ.2500 அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை

 வழக்கமாக 7 ஆயிரம் டன் காய்கறிகள் வரத்து இருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இன்று ஆயிரம் டன் காய்கறிகள் கூடுதலாக வந்துள்ளன. ஊட்டி கேரட் மட்டும் 65 டன் வந்துள்ளது. மாலூர் கேரட் 60 டன் என மொத்தம் 125 டன் வந்துள்ளது. அதேபோல் தக்காளி 1000 டன் வந்துள்ளது.


First published:

Tags: Chennai, Koyambedu Market, Vegetable price