ஹோம் /நியூஸ் /சென்னை /

''வக்காலத்து வாங்கினேன்.. பாவமன்னிப்பு கேட்கிறேன்'' - அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் பரபர பேச்சு

''வக்காலத்து வாங்கினேன்.. பாவமன்னிப்பு கேட்கிறேன்'' - அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் பரபர பேச்சு

திமுகவில் சேர்ந்தார் கோவை செல்வம்

திமுகவில் சேர்ந்தார் கோவை செல்வம்

அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • tamil nadu, India

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இந்நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில்  செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியவர், “  என்னுடைய 14 வயதில் திமுகவிற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தேன். நான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தாய் கழகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. சுனாமி வந்து நாட்டை அழித்தது போல் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டை சீரழித்ததை இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சீர்படுத்து வருகிறார்.

Also see... விருதுநகரில் ஷாக் சம்பவம்.. 10-க்கும் மேற்பட்ட நாய்களை அடித்துக் கொன்ற கும்பல்!

எனவே அவர் வழியில் செயல்பட திமுகவில் இணைந்துள்ளோம். கடந்த நான்கரை வருடம் அதிமுக ஆட்சிக்கு வக்காலத்து வாங்கியதற்காக பொதுமக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது எந்த வித அரசியல் தலையிடும் இன்றி சுமூகமாக தொழில் வர்த்தகம் வியாபாரம் நடைபெற்று வருகிறது” என கூறினார்.

First published:

Tags: ADMK, Chennai, DMK, MK Stalin