ஹோம் /நியூஸ் /சென்னை /

12 மாதங்களில் 190 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

12 மாதங்களில் 190 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு

Chennai | கொரிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்துக்கு வாருங்கள் சலுகைகளுடன் அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக உள்ள்து - அமைச்சர் தங்கம் தென்னரசு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

தமிழ்நாடு அரசு கொரியாவில் உள்ள இந்திய வர்த்தக சபையுடன் (ICCK) இணைந்து சியோலில் நடைபெற்ற சாலைக் கண்காட்சி நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். அப்போது, எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே கொரியா வர திட்டமிட்டு இருந்தோம். கொரானா தாக்கம் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தது.

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் கொரியாவுக்கு வருகை தந்துள்ளோம். கொரியாவுக்கும் தமிழகத்துக்கும் நீண்ட கால வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்பு உள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கொரிய நாட்டைச் சேர்ந்த பல்துறை நிபுணர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருவதாகவும் சாம்சங் நிறுவனத்தில் தொடங்கி Hyundai நிறுவனம் வரை அவர்கள் பணியில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் 10 லட்சமாவது காரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்ததாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடமாக பங்கு வகிப்பதாகவும் கூறினார்.

கொரோனா காலகட்டத்திலும் தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தி 8.8 சதவீதமாக இருந்ததாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளதாக கூறினார்.

உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு தனிக் கொள்கை, காலனி தயாரிப்பதற்கான கொள்கைகள் தொடங்கி பல்வேறு தொழில் கொள்கைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேலும் கடந்த 12 மாதங்களில் 190 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், கொரிய நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டும். முதலீடுகளை செய்ய வேண்டும். அதற்கான அனைத்து விதமான உகந்த சூழ்நிலை தமிழகத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

Also see... நீங்கள் இதை செய்தால் வெற்றி தானாக வந்து சேரும் - மாணவர்களுக்கு அமைச்சர் பிடிஆர் அறிவுரை

தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாகவும் தமிழகத்தில் தொழில் தொடங்க கொரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Business, Chennai, Minister, North and south korea