ஹோம் /நியூஸ் /சென்னை /

கஞ்சா விற்று கல்லா கட்டிய கொல்கத்தா பெண்.. சென்னைக்கு சிகிச்சை வந்து தில்லாலங்கடி வேலை செய்தது அம்பலம்

கஞ்சா விற்று கல்லா கட்டிய கொல்கத்தா பெண்.. சென்னைக்கு சிகிச்சை வந்து தில்லாலங்கடி வேலை செய்தது அம்பலம்

கஞ்சா விற்ற பெண்

கஞ்சா விற்ற பெண்

Crime News : கொல்கத்தாவில் இருந்து காச நோய்க்கு மருத்துவ சிகிச்சை பெற தாம்பரம் வந்த பெண்  கஞ்சா விற்பனையில் அமோகம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கொல்கத்தாவை சேர்ந்த தஸ்லிமா பீவி (வயது 47) காசநோய் சிகிச்சைக்காக சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது கஞ்சா வாங்கியுள்ளார். கொல்கத்தாவில் மிக குறைந்த விலையில் கிடைத்துள்ளது. ஆனால் சென்னையில் கஞ்சாவுக்கு அதிக செலவு செய்ய வேண்டி இருந்துள்ளது.

சென்னைக்கு சிகிச்சைக்காக ஒவ்வொரு முறை வரும்போது அதிக விலைக்கொடுத்து கஞ்சா வாங்க வேண்டி இருந்துள்ளது. நாமே சென்னையில் கஞ்சா சப்ளை செய்து அதிக காசு பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதனையடுத்து கொல்கத்தாவில் தனக்கு தெரிந்த கஞ்சா புரோக்கர் ஒருவர் மூலம் சென்னைக்கு வரும்போது எல்லாம் கஞ்சாவை வாங்கி ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்துள்ளார்.

சித்த மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டே குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மொத்தமாக கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளார். அப்போது ராமாபுரத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 31) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து பல வருடங்களாக போலீசுக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்துவந்துள்ளனர். கொல்கத்தாவில் குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து சென்னையில் அதிக லாபத்துக்கு விற்று கல்லா கட்டி வந்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து எடுத்துவந்த கஞ்சாவை குரோம்பேட்டை பகுதிகளில் விற்பனை செய்துவிட்டு அசோக்குமாரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு கஞ்சா வாங்க கொல்கத்தா செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கடைசியாக அசோக் குமார் போன்று சென்னையில் உட்பட பல பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்துவந்த நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை முன்பணமாக பெற்றுக்கொண்டு சென்றுள்ளார். ஆனால் இதுவரை கஞ்சா கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் தாம்பரம் காவல்துறை ஆணையர் சிறப்பு படையினை நியமித்து தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்பொழுது குரோம்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்து போது அந்தப்பெண்  பிடிபட்டார் . அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்   தான் மருத்துவ சிகிச்சைக்காக வந்ததாகவும் பின்னர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதன் அடிப்படையில் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சாவினை பறிமுதல் செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர்: சுரேஷ் (சென்னை)

First published:

Tags: Cannabis, Chennai, Crime News, Tamil News, Woman