Home /News /chennai /

கொடுங்கையூர் விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு

கொடுங்கையூர் விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு..

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி உயிரிழப்பு..

lockup death | ராஜசேகரை சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்‌ சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்‌ வரும்‌ வழியிலேயே ராஜசேகர்‌ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்‌.

    கொடுங்கையூர் விசாரணை கைதி மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், P-6 கொடுங்கையூர்‌ காவல்‌ நிலைய எல்லையில்‌ சமீபத்தில்‌ ஒரு வீட்டில்‌ 8 சவரன்‌ தங்க நகைகள்‌ திருடு போனது தொடர்பான வழக்கிலும்‌, 2020ம்‌ ஆண்டு, கொடுங்கையூர்‌ பகுதியில்‌ பத்மாவதி என்பவரின்‌ வீட்டில்‌ 28 சவரன்‌ தங்க நகைகள்‌ திருடியது தொடர்பான வழக்கிலும்‌, செங்குன்றம்‌, அலமாதியைச்‌ சேர்ந்த குற்றப்‌ பின்னணி நபர்‌ ராஜசேகர்‌ (எ) அப்பு, வ/33,த/பெ.செளரிராஜன்‌ என்பவர்‌ சம்பந்தபட்டிருப்பது தெரியவந்தது.

    அதன்பேரில்‌, P-6 கொடுங்கையூர்‌ காவல்‌ நிலைய ஆய்வாளர்‌ ஜார்ஜ்‌ மில்லர்‌ பொன்ராஜ்‌ தலைமையிலான காவல்‌ குழுவினர்‌ தீவிர
    விசாரணை மற்றும்‌ தேடுதலில்‌ ஈடுபட்டிருந்த சமயத்தில்‌, நேற்று (12.06.2022) எதிரி ராஜசேகர்‌ (எ) அப்பு, மணலி பகுதியில்‌ பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில்‌, காவல்‌ குழுவினர்‌ நேற்று (12.06.2022) காலை மணலி பகுதிக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த ராஜசேகர்‌ (எ) அப்பு, வ/33, த/பெ.செளரிராஜன்‌, எண்‌.122, வேட்டைக்காரன்பாளையம்‌, முந்திரி தோப்பு, அலமாதி, செங்குன்றம்‌, திருவள்ளூர்‌ மாவட்டம்‌ என்பவரை கைது செய்து, கொடுங்கையூர்‌ எவரெடி காலனியில்‌ உள்ள கொடுங்கையூர்‌ புறக்காவல்‌ நிலையத்தில்‌ வைத்து விசாரணை செய்தனர்‌.

    விசாரணையில்‌ ராஜசேகர்‌, மேற்படி 2 குற்ற சம்பவங்களிலும்‌ திருடியதை ஒப்புக்‌ கொண்டதுடன்‌, மேற்படி திருடிய தங்க நகைகளை செங்குன்றம்‌, காந்தி நகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்‌ சங்கர்‌ என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்‌. மேலும்‌, ராஜசேகர்‌, சோழவரம் காவல்‌ நிலைய திருட்டு வழக்கு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும்‌, இவர்‌ மீது சோழவரம்‌, சென்னை மற்றும்‌ ஆவடி காவல்‌ ஆணையரகத்தில்‌ உள்ள பல காவல்‌ நிலையங்களில்‌ 1 கொலை முயற்சி, கன்னக்களவு வழக்குகள்‌ மற்றும்‌ திருட்டு வழக்குகள்‌ என 25க்கும்‌ மேற்பட்ட வழக்குகள்‌ உள்ளதும்‌ தெரியவந்தது.

    காவல்‌ குழுவினர்‌, மேற்படி தங்க நகைகளை மீட்பதற்காக ராஜசேகரை செங்குன்றம்‌ அழைத்து செல்ல தயாரான நிலையில்‌, ராஜசேகர்‌ வாந்தி வருவதாகவும்‌, உடல்நிலை சரியில்லை என்றும்‌ கூறியதன்பேரில்‌, காவல்‌ குழுவினர்‌ ராஜசேகரை அருகிலுள்ள தனியார்‌ மருத்துவமனைக்கு அழைத்துச்‌ சென்று முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர்‌ மீண்டும்‌ புறக்காவல்‌ நிலையத்திற்கு அழைத்து வந்து ஓய்வெடுக்க அறிவுறுத்தினர்‌.

    Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

    சிறிது நேரம்‌ கழித்து மீண்டும்‌ ராஜசேகருக்கு வாந்தி வருவதாகவும்‌, உடல்நிலை சோர்வாக இருப்பதாகவும்‌ கூறியதன்பேரில்‌, அருகிலுள்ள பெரிய தனியார்‌ மருத்துவமனைக்கு அழைத்துச்‌ சென்றபோது, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினர்‌, நாடித்துடிப்பு குறைவாக உள்ளதாகவும்‌, உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியதின்பேரில்‌, ராஜசேகரை சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்‌ சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்‌ வரும்‌ வழியிலேயே ராஜசேகர்‌ இறந்துவிட்டதாக தெரிவித்தனர்‌.

    இது குறித்து, காவல்‌ உயரதிகாரிகளுக்கு தகவல்‌ தெரிவிக்கப்பட்டு, காவல்‌ உயரதிகாரிகள்‌ ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்‌ விசாரணை மேற்கொண்டனர்‌. மேலும்‌, இது தொடர்பாக, P-6 கொடுங்கையூர்‌ நிலையத்தில்‌ வழக்குப்‌ பதிவு செய்து, செம்பியம்‌ சரக உதவி ஆணையாளர்‌ செம்பேடு பாபு அவர்கள்‌ இவ்வழக்கின்‌ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்‌ டுள்ளார்‌. மேலும்‌, இச்சம்பவம்‌ குறித்து விசாரணை மேற்கொள்ள கனம்‌ நீதிமன்ற நடுவர்‌  அவர்களுக்கு தகவல்‌ தெரிவித்து
    அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில்‌ விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட  ராஜசேகர்‌ (எ) அப்பு திடீரென உடல்நிலை பாதிப்படைந்து இறந்ததால்‌, P-6 கொடுங்கையூர்‌ காவல்‌ நிலைய காவல்‌ ஆய்வாளர்‌ ஜார்ஜ்‌ மில்லர்‌ பொன்ராஜ்‌, உதவி ஆய்வாளர்‌ கன்னியப்பன்‌, தலைமை காவலர்கள்‌ ஜெயசேகர்‌, மணிவண்ணன்‌ மற்றும்‌ முதல்நிலைக்‌ காவலர்‌ சத்தியமூர்த்தி ஆகியோர்‌ நேற்று (12.06.2022) இரவு தற்காலிக பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டனர்‌.

    மேலும்‌ தமிழக காவல்‌ துறை தலைமை இயக்குநர்‌ அவர்கள்‌ மேற்படி வழக்கின்‌ விசாரணையை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறைக்கு (CBCID) மாற்றி உத்தரவிட்டுள்ளார்‌.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Lockup death

    அடுத்த செய்தி