சென்னை தி. நகர் சி.ஐ.டி நகரில் உள்ள ஷெல்லி நிவாஸ் அப்பார்ட்மெண்டில் இயங்கி வரும் சர்வீஸ் அபார்ட்மெண்டில், மேற்கு மண்டல டி.ஐ.ஜி. யும், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அதிகாரியுமான முத்துசாமி தனது தனிப்படை போலீசாருடன் இன்று காலை முதல் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றார்.
நேற்று முன்தினம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி சேனல் "கோடநாடு டூ சி.ஐ.டி நகர்; ஆவணங்களின் பாதை." என்ற தலைப்பில் சிறப்பு செய்தி தொகுப்பை ஒளிப்பரப்பு செய்தது. இதில் தி.நகர் சி.ஐ.டி நகரில் உள்ள ஷெல்லி நிவாஸ் அப்பார்ட்மெண்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து சிறப்பு தகவல்களை அம்பலப்படுத்தியது. இதன் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஷெல்லி நிவாஸ் அப்பார்ட்மெண்டில் இயங்கி வந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட் அறை எண் 302-ல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா மற்றும் சசிகலா தரப்பினருக்கு சொந்தமான ரூபாய் 1,900 கோடி சொத்து மதிப்புகள் கொண்ட ஆவணங்கள் சிக்கியது. இந்த ஆவணங்கள் கோடநாடு பங்களாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் என்பதும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.
இதில் சில ஆவணங்கள் அதிமுகவை சேர்ந்த மணல் ஒப்பந்ததாரரான ஆறுமுகசாமி என்பவரின் மகனும் கோவை பேப்பர்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் உரிமையாளருமான செந்தில்குமார் குறித்த ஆவணங்களும் இருந்தது வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், புக் செய்யப்பட்டிருந்த அறை எண் 302 ஆனது செபாஸ்டின் என்பவருடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி புக் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது, குறிப்பாக அறையை புக் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட அடையாள அட்டைகளின் உரிமையாளரான செபாஸ்டின் அப்போதைய காலகட்டத்தில் குற்ற
வழக்கு ஒன்றுக்காக சிறையில் இருந்தவர் என்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனையடுத்து கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் எப்படி சென்னை சிஐடி நகரில் உள்ள ஷெல்லி நிவாஸ் என்ற சர்வீஸ் அபார்ட்மெண்டுக்கு வந்தது என்ற விசாரணையானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவை பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்ன் உரிமையாளரான செந்தில்குமாரிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஐ.பி.எஸ்., கடந்த இரண்டு தினங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் சி.ஐ.டி நகரில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் அறையை புக் செய்தது யார்? சிறையில் இருந்த ஒரு கைதியின் அடையாள அட்டைகளை பயன்படுத்தி அறையை புக் செய்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று காலை முதல் ஷெல்லி நிவாஸ் அப்பார்ட்மெண்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஷெல்லி நிவாஸ் கட்டிடத்தின் உரிமையாளர் நாகிரெட்டி, சர்வீஸ் அப்பார்ட்மென்ட் நடத்தி வந்த ஆண்டனி வெலிங்டன் ஆகிய இருவரிடமும் டிஐஜி முத்துசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஸ்வரூபம் எடுத்து வரும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையானது தமிழக அரசியலில் குறிப்பாக அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kodanadu estate