ஹோம் /நியூஸ் /சென்னை /

தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்பின்‌ கம்பீரம் கீழ்பாக்கம் மனநல காப்பகம்

தமிழ்நாட்டு மருத்துவ கட்டமைப்பின்‌ கம்பீரம் கீழ்பாக்கம் மனநல காப்பகம்

கீழ்பாக்கம் மருத்துவமனை

கீழ்பாக்கம் மருத்துவமனை

Chennai | மனநோயாளிக்கு மறுவாழ்வே கிடையாது என்று எண்ணிய காலத்தில் காப்பகமாக தொடங்கப்பட்டது கீழ்ப்பாக்கம் மருத்துவமனை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

"ஹேய், என்ன கீழ்பாக்கத்துல‌ இருந்து வந்துட்டியா?"

என‌ கேட்டாலே, மனநலம் சரியில்லாத நிலைமையை கேலியாக சுட்டும் அளவுக்கு நம் மனதில் பதிந்து விட்டது. அதற்கு காரணம், 228 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த மருத்துவமனைதான். இது உண்மையில் கேலிப் பொருள் அல்ல.‌ தமிழ் நாட்டு மருத்துவ கட்டமைப்பின்‌ கம்பீரங்களில் ஒன்று.

1795ம் ஆண்டில்,‌ ஈஸ்ட் இந்தியா கம்பெனி,‌ மனநலம் பாதித்தோருக்காக ஒரு ஏற்பாட்டை இந்த இடத்தில் உருவாக்க அறுவை சிகிச்சை நிபுணர் வேலண்டைன் கனாலி என்பவரை நியமித்தது. 1871ம் ஆண்டு 66.5 ஏக்கர் நிலபரப்பில் கீழ்பாக்கத்தில் தற்போது உள்ள இடத்தில் 'பித்து பிடித்தவர்கள்' காப்பகம் கட்டப்பட்டது.

1939ம் ஆண்டு முதல் 1948ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மின்சாரம் செலுத்தும் சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1948ம் ஆண்டு மன நல சிகிச்சைக்காக மூளையில் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அறிவியல் வளர்ச்சி காரணமாக காலப்போக்கில் இவை கைவிடப்பட்டன. எனினும் இவற்றின் சாட்சியாக இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை இருக்கிறது.

பிறருக்கு ஆபத்தானவர்கள் என கருதப்பட்ட நோயாளிகள் இரும்பு கம்பிகள் கொண்ட தனி அறையில் விலங்கிட்டு வைக்கப்பட்டு இருந்தனர். அறையின் ஒரு மூலையை கழிவறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று தனி அறைகள் கொண்ட கட்டிடம் மட்டுமே நிற்கிறது. நாகரீக சமூக வளர்ச்சி காரணமாக இந்த பழக்கமும் கைவிடப்பட்டது.

அதே போன்று தொழுநோயாளிகளுக்கான வார்டு, குழந்தைகளுக்கான தனி வார்டும் காலப்போக்கில் கைவிடப்பட்டன.

200 ஆண்டுகளாக மாறாமல் வளாகத்தில் இருக்கும் கட்டிடம் ஆண்கள் மனமகிழ் மன்றமாகும். தற்போதும் அதே காரணத்துக்காக அந்த கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நோயாளிகளுக்கான சிகிச்சைகள் மாற மாற நோயாளிகளுக்கான சிகிச்சையாக தொழில்வழி பயிற்சி மையம் 1970களில் அப்போதைய இயக்குனர் சாரதா மேனன் முயற்சியால் தொடங்கப்பட்டது.

1948 முதல் பாராமெடிக்கல் மற்றும் இளநிலை மருத்துவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 1871ல், இந்த மருத்துவமனையில் 145 நோயாளிகள் இருந்தனர். தற்போது 750க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர்.

Also see...மதுரையில் நாளைய மின்தடை பகுதிகள்- உங்க ஏரியா இருக்கா?

தென்னிந்தியா முழுவதிலும் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக கிரிமினல் வார்டு 1892ல் தொடங்கப்பட்டது. 1954ல்  170 நோயாளிகள் இந்த வார்டில் இருந்தனர்- சென்னை சென்ட்ரல் சிறையின் ஒரு அங்கமாகவே இது கருதப்பட்டது.  தற்போது கிரிமினல் வார்டில் மூன்று பெண்கள்  உட்பட 26 பேர் உள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பார்வை சமூகத்தில் மாற மாற மருத்துவமனையும் பெயர் மாற்றம் பெற்று வந்தது. பித்து பிடித்தவர்களுக்கான காப்பகம் என்பதிலிருந்து 1922ம் ஆண்டு அரசு மனநல மருத்துவமனை என மாறியது. 1977ம் ஆண்டு முதல்வராக இருந்த எம் ஜி ஆர், இதனை மன நல நிறுவனம் - Institute of Mental Health என பெயர் மாற்றம் செய்தார்.

Also see... கோவில்பட்டி பகுதியில் பொய்த்து போன மழை - விலைக்குத் தண்ணீர் வாங்கி பயிர்களை பாதுகாக்கும் விவசாயிகள்

தென்னிந்தியா முழுவதிலும் இருந்து வந்த நோயாளிகளுக்கான மன நல காப்பகமாக இந்த மருத்துவமனை செயல்பட்டதாக அதன் இயக்குநர் பூர்ண சந்திரிகா குறிப்பிடுகிறார். மனநோயாளிக்கு மறுவாழ்வே கிடையாது என்று எண்ணிய காலத்தில் காப்பகமாக தொடங்கப்பட்டதாகவும் ஆனால் தற்போது நோயாளிகள் மறுவாழ்வுடன் சமூகத்தில் மீண்டும் வாழ முயற்சிகள் எடுக்கும் வகையில் மனநல பாதிப்புகள் குறித்த பார்வை மாறியுள்ளதாக கூறுகிறார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Hospital, Kilpauk