Home /News /chennai /

அக்கா, தம்பி எனக்கூறி ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை.. கொலையில் முடிந்த சோகம்!

அக்கா, தம்பி எனக்கூறி ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் வாழ்க்கை.. கொலையில் முடிந்த சோகம்!

காதலியை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய காதலன்!

காதலியை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய காதலன்!

மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடந்த 4 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக வாழ்ந்து வந்த மஞ்சுளா - சந்தோஷ் குமார் என்ற நபர்களில் மஞ்சுளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தோஷ் குமார் என்பவர் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடம் சென்று பிரேத விசாரணை நடத்திய போது முகம் மற்றும் கழுத்து பகுதியில் நக காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து உடற்கூராய்வுக்காக மஞ்சுளாவின் உடலை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மஞ்சுளாவுடன் கடந்த நான்கு மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் ஒன்றாக தங்கி வந்த சந்தோஷ் குமாரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் சந்தோஷ் குமார் மஞ்சுளாவை கொலை செய்து துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேக மரணம் வழக்கை கொலை வழக்காக மாற்றி சந்தோஷ்குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட மஞ்சுளா(23) என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்தவர் என்பதும், கைது செய்யப்பட்டுள்ள சந்தோஷ் குமார்(21) அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இருவரும் தஞ்சாவூர் பகுதியில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த போது நட்பு ஏற்பட்டு பின் இவர்களுக்குள் காதல் மலர்ந்ததும் தெரிய வந்தது.

பின்னர், சென்னைக்கு சென்றால் அங்கு வேலை பார்த்து சந்தோஷமாக இருவரும் இருக்கலாம் எனப்பேசி கடந்த 4 மாதங்களுக்கு முன் மஞ்சுளாவும், சந்தோஷ் குமாரும் சென்னை வந்து பின்னர் சிந்தாதிரிப்பேட்டை அய்யா முதலி தெருவில் உள்ள ஒரு சிறிய வீட்டில் மாதம் ரூ.3000 ஆயிரம் வாடகையில் குடியேறியுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் இருவரையும் கண்டு சந்தேகப்பட, இருவரும் தங்களை அக்கா தம்பி என்றும் வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறி வாடகை வீட்டில் குடியேறியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிந்தாதிரிப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து பின் மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால் செண்டரில் வேலைக்கு சேர்ந்துள்ளார். சந்தோஷ் வீட்டுக்கு அருகே நூல் நெசவு கம்பெனியொன்றில் பணி புரிந்து வந்துள்ளார்.

இப்படியே மஞ்சுளாவும் சந்தோஷ் குமாரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் சமீப காலமாக சந்தோஷ் குமார் தினந்தோறும் மது குடித்துக் கொண்டும் கஞ்சா குடித்தும் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். சந்தோஷ் குமாரின் இந்த திடீர் போதை பழக்கத்தால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தான் நம்பி வந்த தனது காதலர் போதைப்பழக்கத்துக்கு ஆளானதால் மனமுடைந்த மஞ்சுளா பெங்களூரில் பணிபுரியும் தனது முன்னாள் காதலரிடம் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். மஞ்சுளா தனது முன்னாள் காதலனிடம் செல்போனில் பேசுவதை அறிந்த சந்தோஷ் குமார் தினமும் மஞ்சுளாவை தாக்கி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், கடந்த சில தினங்களாக வீட்டு செலவுக்கு சந்தோஷ் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததும், அதனால் மஞ்சுளா கடந்த இரண்டு தினங்களாக சமைக்காமல் இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார், வீட்டில் மஞ்சுளா சாப்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்து மஞ்சுளாவிடமும் சண்டை போட்டு உள்ளார். இந்த சண்டை பெரிதாக ஏற்கனவே முன்னாள் காதலருடன் பேசுவதால் ஆத்திரமடைந்த சந்தோஷ், மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்து பின் துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

மஞ்சுளாவை கொலை செய்து மின்விசிறியில் தொங்கவிட்ட  பின் பயந்து போன சந்தோஷ் குமார் அங்கிருந்து நேராக ஸ்ரீபெரும்புதூருக்கு சென்று பெண் வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும், இன்று காலை காவல் கட்டுப்பாட்டறைக்கு கால் செய்து தன்னுடன் தங்கி இருந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடியுள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தோஷ் குமாரை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Crime News, Murder, Murder case

அடுத்த செய்தி