கல்லூரி படிப்புகளுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழு மூலம் சென்னை மாணவருடன் அறிமுகமான கேரள மாணவி அவரை போராடி திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை திருவெற்றியூரை சேர்ந்த கமலேஸ்வரன் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் பிஏ பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் கேரளவை சேர்ந்த சஜிதா என்பவரும் 3ம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இதற்காக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, பாடம் தொடர்பாக சந்தேகங்கள் கேட்டு தகவல்களை பரிமாறி கொண்டனர்.
அப்போது கமலேஸ்வரன் மீது சஜிதாவிற்கு காதல் மலர்ந்தது. முதலில் சஜிதா தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார் பின்னர் 15 நாட்கள் பிறகே கமலேஷ் காதலை ஏற்று கொண்டார். பின்னர் செல்போன் மூலம் தொடர்ந்த இந்த காதல் விவகாரம் சஜிதாவின் அண்ணனுக்கு தெரிய வந்த நிலையில், அவர் சஜிதாவை மிரட்டியுள்ளார்.
அவர் வீட்டில் மாப்பிள்ளையும் பார்க்க ஆரம்பித்தனர். இந்த தகவலை கமலேஸ்வரனிடம் சொன்ன சஜிதா, வாழ்ந்தால் உன்னுடம் தான் வாழ்வேன். இல்லையென்றால் செத்துவிடுவேன் என கூறியுள்ளார். இதில் உருகிப்போன கமலேஷ் சஜிதாவை சென்னை வருமாறு கூறியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சியடைந்த சஜிதா, உடனே ரயில் ஏறி சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார். கமலேஷ் அவரை அழைத்து கொண்டு பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைத்தவுடன் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து பாரிமுனையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து வைத்தனர்.
அதே சமயம், கேரளாவில் சஜிதாவில் பெற்றோர்கள் தங்கள் மகளை காணவில்லை எனவும் அவர் சென்னை சென்றிருக்கலாம் எனவும் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கேரள போலீசாரும் சென்னை வந்து கமலேஷின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். கேரள போலீஸ் தேடி வருவார்கள் என அறிந்த கமலேஷ் - சஜிதா பகல் நேரங்களில் பேருந்துகளிலும் இரவு நேரங்களில் ரயில்வே ஸ்டேஷன் பிளார்பாரங்களிலும் தங்கி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் வக்கீலுடன் தஞ்சம் அடைந்தனர். அப்போது அங்கு வந்த கேரள போலீசார், சஜிதாவை நீதிபதி முன் ஆஜர்படுத்த கேரளா அழைத்து செல்ல வேண்டுமென என கோரியுள்ளனர். சஜிதாவின் உறவினர்களும் அவரை கேரளா அழைத்து செல்ல கடும் முயற்சி எடுத்தனர். ஆனால் சஜிதா சற்றும் தளரவில்லை.
இதனையடுத்து வேறு வழியின்றி கேரளா நீதிபதியிடம் வீடியோ கால் மூலம் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு குறித்து சஜிதாவிடம் விசாரித்த நீதிபதி, சஜிதாவின் விருப்பத்திற்கேற்ப கமலேஷுடன் செல்ல அனுமதி வழங்கினார்.
வாட்ஸ்அப் மூலம் மலர்ந்த காதல் மொழி, இனம், ஜாதி அனைத்தையும் கடந்து கேரளாவில் இருந்து சென்னை வரை ஒரு பெண்ணை அழைத்து வந்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Love marriage