Home /News /chennai /

ஒபிஎஸ்-இபிஎஸ் அணியில் இல்லாத அதிமுகவினரை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்போவதாக கே.சி. பழனிசாமி அறிவிப்பு

ஒபிஎஸ்-இபிஎஸ் அணியில் இல்லாத அதிமுகவினரை அழைத்து சென்னையில் கூட்டம் நடத்தப்போவதாக கே.சி. பழனிசாமி அறிவிப்பு

கே.சி.பழனிசாமி

கே.சி.பழனிசாமி

ADMK : அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய முடியாது என்று கே.சி. பழனிசாமி கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்ய முடியாது என்று கூறிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அதிமுகவை சிதைத்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கே.சி. பழனிசாமி, அதிமுக வரலாற்றில் இன்று ஒரு கருப்பு நாள் என தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஸ் தங்களுக்கு தகுந்தார் போல், கட்சியின் விதிகளில் பல மாற்றங்களை செய்திருப்பதாகவும், அவ்வாறு செய்ய முடியாது. என்றும் கூறினார்.

ஒபிஎஸ் -இபிஎஸ் சுயநலத்தால் இவ்வளவு பெரிய சண்டை நடந்துள்ளதாக கூறிய  கே.சி. பழனிசாமி, கடந்த 4 ஆண்டு காலத்தில் இவர்களுக்கு ஏற்றாற் போல் பல்வேறு திருத்தங்களை செய்து மாற்றி உள்ளதாக தெரிவித்தார். ஆளும் கட்சியை எதிர்த்து பேச கட்சியில் ஆள் இல்லை என கூறிய அவர், இவர்களுடைய பிளவு பாஜக மற்றும் திமுகவுக்குத் தான் உதவும் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெயலலிதா இருந்த வரை அதிமுக உறுப்பினர்களை வைத்து பொதுச்செயலாளார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறினார் என்றும் கே.சி. பழனிசாமி தெரிவித்தார். அஇஅதிமுக-வின் எந்த அணியையும் சாராத பொது உறுப்பினர்களை வைத்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்த அவர், வருகிற 16 ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கூறினார்.

Must Read : அதிமுக அலுவலக தகராறுக்கும், திமுகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி

எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் அனைவரும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள், இவர்களால் எப்படி மத்திய அரசை எதிர்க்க முடியும் என கேள்வி எழுப்பினார். சின்னம் முடக்கினாலும் பரவாயில்லை தன்னையும் தன்னை சூழ்ந்திருப்பவர்களை பாதுகாக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும் அப்போது குற்றம் சாட்டினார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, EPS, OPS

அடுத்த செய்தி