முகப்பு /செய்தி /சென்னை / சென்னை கத்திவாக்கத்தில் பள்ளிக்கு அரசு வழங்கிய இடம் பறிபோகும் நிலை; பள்ளி மாணவர்கள் போராட்டம்

சென்னை கத்திவாக்கத்தில் பள்ளிக்கு அரசு வழங்கிய இடம் பறிபோகும் நிலை; பள்ளி மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

Kathivakkam School Protest | சென்னை எண்ணூர்,கத்திவாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு அரசு வழங்கிய இடம் பறிபோகும் நிலை உள்ளதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை, கத்திவாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகே இருந்த 4.3 ஏக்கர் தனியார் நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்   30 லட்சத்திற்கு அரசு கல்வித்துறை விலைக்கு வாங்கி கத்திவாக்கம் அரசினர் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இந்நிலையில் அரசு வாங்கிய நிலத்தின் தொகையானது போதுமானதாக இல்லை என நிலத்தின் சொந்தக்காரர் ஒருவர் காசோலையை வாங்க மறுத்து பல ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை  அரசு அதிகாரிகள் அலட்சியமாக எதிர்கொள்ளாமல் விட்டதால் நிலத்திற்கு உரிமையாளர் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் தனியார் நபருக்கு சொந்தம் என தீர்ப்பு தெரிவித்தது.

மேலும் இந்த தீர்ப்பில் அரசு மீண்டும் கையகப்படுத்தி அதற்கான தொகையை நிர்ணயம் செய்து தொகையினை அளித்து நிலத்தினை பெற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பெட்ரோனாஸ்ய சங்கரத்தினாலும் பொதுநல சங்க நிர்வாகிகளும் பள்ளியின் நிலத்தை மீட்டு தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் நிலத்தின் உரிமையாளர் தற்போது நிலத்தை அளக்க காவல்துறை உதவியுடன் வந்துள்ளதால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலமானது அரசு பள்ளி மாணவர்கள் மாணவிகளின் விளையாட்டு திடலாக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில் இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான நிலத்தை மீட்டு பள்ளிக்கு தருமாறு கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிலம் அளக்க வந்த அதிகாரிகளிடம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர்  அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இதனை அடுத்து தற்காலிகமாக மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

செய்தியாளர்: அசோக்குமார்

First published:

Tags: Chennai, Local News, Protest