ஹோம் /நியூஸ் /சென்னை /

பொங்கல் விழா.. குறைந்தது மீன்கள் விலை.. வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

பொங்கல் விழா.. குறைந்தது மீன்கள் விலை.. வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

காசிமேடு

காசிமேடு

ஞாயிற்றுக்கிழமையான இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு காசிமேடு மீன் பிடி துறைமுகம் கலை இழந்து காணப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஞாயிற்றுக்கிழமையான இன்று பொங்கல் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சைவ பிரியர்களினால் கூட்ட நெரிசலாகக் காணப்படும் காசிமேடு மீன் சந்தை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பொங்கல் காரணமாக இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பெரிதளவு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.

குறைந்த அளவிலேயே மீனவர்கள் கடலுக்குச் சென்று இன்று அதிகாலை கரைக்குத் திரும்பினர். அதனால் சந்தைக்கு மீன் வரத்து குறைந்து விட்டது.  மேலும் மீன்களை வாங்க மக்களும் சந்தைக்குச் செல்லவில்லை.

இதனால் காசிமேடு மீன் பிடி துறைமுகம் வழக்கத்திற்கு மாறாகக் கலை இழந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலைகளும் சரிந்தது. பெரிய வகை மீன்களான வஞ்சிரம். பாறை உள்ளிட்ட மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. 700 ரூபாய்க்கு குறைவாகவே மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Also Read : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த புத்தம் புது ரூ.100 நோட்டு.. மகிழ்ந்த தொண்டர்கள்...!

வஞ்சிரம் கிலோ 700 ரூபாய்,  சங்கரா உள்ளிட்ட மீன்கள் 400 ரூபாய்க்கும், பாறை 500 ரூபாய்க்கும், இறால் மற்றும் நண்டு உள்ளிட்டவை 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

First published:

Tags: Fish, Kasimedu, Pongal 2023