காசிமேடு மீன் சந்தையில் நள்ளிரவில் குவிந்த அசைவ பிரியர்கள் கூட்டம்.. முக்கிய மீன் ரகங்களின் விலை விவரம்..
காசிமேடு மீன் சந்தையில் நள்ளிரவில் குவிந்த அசைவ பிரியர்கள் கூட்டம்.. முக்கிய மீன் ரகங்களின் விலை விவரம்..
காசிமேடு மீன் சந்தை
Chennai Kasimedu Fishmarket : ஆடி மாதம் இரண்டாம் வாரத்தில் அம்மனுக்கு படைக்க காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அலைமோதிய அசைவ பிரியர்கள் கூட்டம். படங்கள்: செய்தியாளர் - அசோக்குமார் (திருவொற்றியூர்)
சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் பொதுவாக விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்கு கூடுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாதத்தின் இரண்டாம் வாரமான இன்றும் மீன் விற்பனை கூடத்தில் ஏராளமான அசைவ பிரியர்கள் அம்மனுக்கு படைக்க மீன்களை வாங்குவதற்காக கூடியுள்ளனர்
காசிமேடு கடற்கரையிலிருந்து கடலுக்குள் விசைப்படகுகள் மூலமாக மீன்களை பிடித்து நேரடியாக காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்படுவதால் சென்னையில் உள்ள பல மொத்த வியாபாரிகளும் மீன் அசைவ பிரியர்களும் ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்காக வந்துள்ளனர்.
நள்ளிரவு முதலே கூட்டம் அசைவ பிரியர்களால் அலைமோதிய கூட்டத்தில் அதிக அளவு திரண்டனர்வஞ்சிரம், வவ்வா, கொடுவா, நாயாறல், சீலா, கானாங்கத்தை போன்ற பெரிய மீன்களின் வரத்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டனமீன்களின் வரத்தை போலவே விலையும் சற்றே விலை உயர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
விலைப்பட்டியல் வஞ்சிரம் கிலோ 1200 முதல் 1500, நாயாறல் கிலோ"900 முதலும்,கொடுவா கிலோ 800 முதல் 1000 வரையும், பர்லா கிலோ 350, பாறை கிலோ 250,சங்கரா 400 முதல், கடம்மா கிலோ 400 முதல், நெத்திலி கிலோ 400 முதல் ..
இறால், நண்டு போன்றவை 450 முதல் 650வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.