ஹோம் /நியூஸ் /சென்னை /

குறைந்தது மீன் விலை.. காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்.. விலை பட்டியல் இதோ..!

குறைந்தது மீன் விலை.. காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்.. விலை பட்டியல் இதோ..!

காசிமேடு

காசிமேடு

Kasimedu fish sale | மீன்களின் விலை குறைந்துள்ளதால் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்க காசிமேட்டில் குவிந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai

சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை குறைவால் அசைவ பிரியர்கள் ஆர்வமாக சென்று மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.

பண்டிகை நாட்கள் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான விசை படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்பினர். பெரிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, உள்ளிட்ட மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது.

விலையும் குறைவாக இருந்ததால் மீன் விற்பனை செய்யும் பெண்கள் கூடைகளில் ஏல முறையில் மீன்களை வாங்க வந்தனர். இதேபோன்று விரத  தினம் முடிந்து முதல் ஞாயிற்றுக் கிழமையான  இன்று மீன் விற்பனை கடைகள் அதிகமாக காணப்பட்டது.  அதிகாலை 2 மணி முதலே சுற்று வட்டார பகுதியில் உள்ள மீன் பிரியர்கள் மீன் வாங்க வந்ததால் காசிமேடு மீன்பிடி  துறைமுகம் பகுதி நீண்ட நாட்களுக்கு பிறகு திருவிழா கூட்டம்  போல காட்சி அளித்தது.

இந்த வாரம் ஏராளமான கடைகள் இருந்ததால் தேவையான மீன்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இதேபோன்று காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் மீனவர்கள் மொத்த விலையிலும்,  சில்லறை விலையிலும் மகிழ்ச்சியுடன் மீன்களை விற்பனை செய்தனர்.

S.noமீன் வகைவிலை பட்டியல்
1.வஞ்சிரம்ரூ.700
2.கொடுவாரூ.500
3.சீலாரூ.500
4.சங்கராரூ.600
5.பாறைரூ.400
6.இறால்ரூ.400
7.நண்டுரூ. 300
8.நவரைரூ.200
9.காணங்கத்தைரூ.200

First published:

Tags: Fish, Kasimedu