Home /News /chennai /

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு..சுடுகாட்டில் தலை துண்டித்து இளைஞர் கொடூரக்கொலை..பெரம்பூரில் பரபரப்பு..

மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு..சுடுகாட்டில் தலை துண்டித்து இளைஞர் கொடூரக்கொலை..பெரம்பூரில் பரபரப்பு..

கொலை செய்யப்பட்ட கார்த்திக்

கொலை செய்யப்பட்ட கார்த்திக்

Crime News | முன் விரோதத்தினால் சுடுகாட்டில் நடைப்பெற்ற கொலையால் பெரம்பூர் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் சேர்ந்து உடன் மது அருந்திய நபரின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (30)  நேற்று மதியம் 12 மணியளவில் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனையில் கார்த்திக் உடன் மது குடித்துக் கொண்டிருந்த  ஐந்து பேர் சரமாரியாக கார்த்திக்கை வெட்டினர்.

    இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். உடனே அங்கிருந்த நபர்கள்  தப்பி சென்று விட்டனர் சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் கார்த்திக்கின்  உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    Read More : திண்டுக்கல்லில் நண்பர்களுடன் சேர்ந்து 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை... 3 பேர் போக்ஸோவில் கைது...


    விசாரணையில்  இரண்டு மாதத்திற்கு முன்பு பிரபல ரவுடியான காட்டான் மோகன் என்பவருடன் சேர்ந்து கார்த்திக் மது அருந்தியதாகவும் அப்போது கார்த்திக் காட்டான் மோகனை அடித்ததாகவும் அந்த முன் விரோதத்தில்  காட்டான் மோகனின் மகன் மாதவன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

    குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் . சுடுகாட்டில் நடைப்பெற்ற இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Chennai, Murder case, Perambalur

    அடுத்த செய்தி