முகப்பு /செய்தி /சென்னை / "கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது..." - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

"கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது..." - கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

கவர்னர் ரவி, கார்ல் மார்க்ஸ்

கவர்னர் ரவி, கார்ல் மார்க்ஸ்

நம் பேராசியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள் அது வேதனையாக உள்ளது - கவர்னர் ரவி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது எனவும் இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள பாரதிய ஜனசங்கத்தின் தலைவர் தீனதயாள் உபாத்யாயா பெயரில் அமைந்துள்ள ஆராய்சி இருக்கை சார்பில் பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த தீனதயாள் உபாத்யாயாவின் "Dispersion of thought, Integral humanism" புத்தகங்களின் தமிழாக்க நூல்களான 'சிந்தனை சிதறல்கள்' மற்றும் 'ஒருங்கிணைந்த மனிதநேயம்' ஆகிய புத்தகங்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார்.

அதில் பேசிய கவர்னர், “இந்தியா சாதி, இனம் என பிளவுப்பட்டுள்ளது. கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் உள்ளோம். இதற்கெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய மனநிலையை பின்பற்றுவதே காரணம்.

75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கும் அதுவே காரணம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது எனவும் இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது” என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு பல்கலைக்கழக வேந்தர் என்னும் பொறுப்பில்  இருந்து கொண்டு கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் செல்லும் போது நம் பேராசியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள் அது வேதனையாக உள்ளது.

அபிரகாம் லிங்கன் அடிமைதனத்தை அமெரிக்க நலனுக்காக ஆதரித்தார். பெண்களுக்கான ஓட்டு உரிமையை ஆப்ரகாம் லிங்கன் வழங்க மறுத்தார். அவரை ஜனநாயகத்திற்கான உதாரணமாக காட்டுகிறோம் இது தவறான முன்னுதாரணம். காலணி ஆதிக்க மனநிலையை முதலில் புறந்தள்ளுங்கள்.

25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும். இந்தியாவின் பிரச்சனைகளை தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க கூடாது, அதனை ஒருங்கிணைந்து நாம் எதிர்கொள்ள வேண்டும். பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் உலக நாடுகளுக்கு திண்டாடிவருகின்றனர். ஆனால் தீர்வு இந்தியாவிடம் உள்ளது.

மொழி, இனம் ஆகியவை வைத்து மக்களை பிரிக்க முடியாது மக்கள் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். உலகின் பாதி நாடுகள் இந்தியாவுலிருந்து செல்பவர்களுக்கு அந்த நாட்டிற்கு சென்று இறங்கிய பின்னர் விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. இது இந்தியாவின் வளர்சியையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது” என பேசினார்.

First published:

Tags: Communist Party, Governor, RN Ravi