Home /News /chennai /

கனல் கண்ணன் ஜாமீன் நிபந்தனையை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கனல் கண்ணன் ஜாமீன் நிபந்தனையை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

கனல் கண்ணன்

கனல் கண்ணன்

Kanal Kannan | கேரளாவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் ஜாமின் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டுமென கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் படப்பிடிப்பிற்காக கேரளா செல்வதால், சென்னை காவல்துறை முன்பு தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை 8 நாட்களுக்கு மட்டும் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னையில் கடந்த மாதம் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் உரையாற்றினார். அதில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியிருந்தார்.

    இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை சைபர் க்ரைம் போலீசார் ஆகஸ்ட் 15ஆம் தேதி கனல் கண்ணனை கைது செய்தனர்.

    இதையும் வாசிக்க: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திடீர் விசிட்! ஸ்வீட் கொடுத்த சசிகலா!!

    இதனையடுத்து, 4 வாரங்களுக்கு இரு வேளையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் சென்னை உயர் நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் ஜாமின் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டுமென கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை செப்டம்பர் 10 முதல் 17ம் தேதி வரை 8 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் செப்டம்பர் 18ம் தேதி முதல் விசாரணை அதிகாரி முன்பு மீண்டும் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai High court, Chennai Police, Kanal Kannan

    அடுத்த செய்தி