Home /News /chennai /

தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை - கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு

தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை - கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் மனு

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்

Kallakurichi | கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட   பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார்.  மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Also Read : திமுக மட்டுமே அறிவுசார்ந்த கட்சியாக நினைத்து கொள்ளாதீர்கள் - உச்ச நீதிமன்றம் காட்டம்

இவ்வழக்கு சிபிசிஐடி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.  கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர். சிறப்பு நீதிமன்றம்,  கடந்த வாரம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து ஜாமீன் கோரிபள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரும்  ஜாமீன் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றசாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Vijay R
First published:

Tags: Chennai High court, Kallakurichi, Madras High court

அடுத்த செய்தி