சென்னை பெருநகர மாநகராட்சியில் 70 ஆண்டுகளாக ஒரே ஒரு தனியார் பேருந்து மற்ற மாநகர அரசு பேருந்துகளுக்கு மத்தியில் குயினாக இயங்கி வருவது ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் கிராமத்தில் இருந்து சென்னை பாரிமுனைக்கு 70 ஆண்டுகளை கடந்து இயங்கி வருகிறது இந்த தனியார் பேருந்து.
இதையும் படிங்க; வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளா..? மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்..!
இந்தப் பேருந்தில் குறைந்த கட்டணம் ஐந்து ரூபாய். சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் கண்ணில் படும் மாநகரப் பேருந்துகளுக்கு மத்தியில் பிராட்வே தொடங்கி பூவிருந்தவல்லி வழித்தடத்தில் எண் 54 டி கலைவாணி என்ற தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் பேருந்து அரசு நிர்ணயித்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. மாநகரப் பேருந்துகள் நிறம் மாற்றப்படும் போதெல்லாம் இந்த பேருந்துக்கும் நிறம் மாற்றுகின்றனர்.
இந்தப் பேருந்தின் இருக்கை வசதி உட்பட அனைத்தும் அரசு பேருந்து போலவே உள்ளது. பயணச்சீட்டில் கலைவாணி பஸ் சர்வீஸ் என்று அச்சிடப்பட்டிருக்கிறது. உள்ளே சென்று டிக்கெட் வாங்கி பார்த்தால் மட்டுமே இது தனியார் பேருந்து என்று தெரியும். பயணிகள் இனிமையாக பாடல்கள் கேட்டுக்கொண்டு பயணிக்கின்றனர்.
1972 ஆம் ஆண்டில் அப்போதைய அரசு சென்னை மாநகராட்சியில் ஓடிய பேருந்துகளை அரசுடமையாக்கியது. அப்போது பலர் தங்களது பேருந்துகளை அரசிடம் ஒப்படைத்தனர். சிலர் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு பெற்று இயக்கி வந்தனர். குறிப்பிட்ட வழித்தடங்களில் அரசு பேருந்துகள் அதிக அளவு இயக்கப்பட்டதால் இழப்பை சமாளிக்க முடியாமல் தனியார் பேருந்து முதலாளிகள் பேருந்துகளை அரசிடமே ஒப்படைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.