ஹோம் /நியூஸ் /சென்னை /

காணும் பொங்கல்.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்..!

காணும் பொங்கல்.. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள்..!

வண்டலூர் பூங்கா

வண்டலூர் பூங்கா

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்பதால் வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பூங்கா திறந்திருக்கும் எனவும் பிற்பகல் 2 முதல் 3 மணி வரையும், 3 மணி முதல் 4 மணி வரையும் 2 முறை யானைகள் குளிப்பதை பார்வையாளர்கள் பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காக புகைப்பட கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர் வசதி, உணவு விற்பனை நிலையங்கள், கழிப்பறை, மருத்துவ உதவி மையம், 5 அவசர ஊர்திகள், ஓய்வு பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து பூங்காவிற்கு வர இலவச போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுழைவு சீட்டு வழங்கும் 20 கவுன்டர்களும் முழுமையாக செயல்படும். 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கையில் பெற்றோரின் விவரம் அடங்கிய அடையாள அட்டை மாட்டப்படும். முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Holiday, Pongal 2023