பெருந்தலைவர் காமராசரின் 120 வது பிறந்தநாளையொட்டி
சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராசர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரின் புகைப்படத்திற்கு திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி மலர் தூவி மரியாதை செலுத்தினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராசர் கல்வி வள்ளல் எனவும் பச்சை தமிழர் என பெரியாரால் வர்ணிக்கக்பட்டவர் எனவும் கூறினார். காமராசர் குலக்கல்வியை ஒழித்த காரணத்தால் தான் அனைவருக்கும் கல்வி கிடைத்தது என கூறிய அவர், இன்று புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மாணவர்களை வடிகட்டி கொண்டிருக்கிறார்கள் என்றார். குலக்கல்வி வேறு அவதாரம் எடுத்துள்ளது, அதை ஒழிப்பது தான் காமராசருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியாதை ஆகும் என தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் தன்னிச்சையாக நடந்துகொண்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த வீரமணி, ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்த நினைக்கிறார். தமிழக அரசு பார்த்து வழங்கிய பதவியில் தான் அவர் உள்ளார் என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாநில அரசு மற்ற மாநிலங்களை போல வேந்தர்களை அரசே நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளது. அதற்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டிய வீரமணி, தமிழகத்தில் ஆளுநர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Must Read : எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை
சேலம் பெரியார் பல்கலைக்கழக தேர்வில் எது தாழ்ந்த சாதி என கேள்வி கேட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக கூறிய வீரமணி, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் காவி மையம் ஆகி கொண்டிருக்கிறது எனவும், இதற்கு காரணமானவர்கள் மீது உயர்க்கல்வித்துறை அமைச்சர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறித்தினார்.
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.