Home /News /chennai /

பாஜகவை எப்படி கையாள வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும் - கி.வீரமணி

பாஜகவை எப்படி கையாள வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும் - கி.வீரமணி

கி.வீரமணி

கி.வீரமணி

Chennai | 14 ஆண்டுகளாக சிம்சானத்தில் இருந்த செருப்பை வழிபட்டவர்கள்தான் பா.ஜ.கவினர். அதனால்தான் செருப்பு மீதான காதல் மோகம் அதிகரித்து இருப்பதால், இன்றும் செருப்பை பயன்படுத்தி அரசியல் செய்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
பாஜகவினர் தமிழகத்தில் அரசியல் ரீதியாக குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களை எப்படி கையாள வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். 

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி வீரமணி தலைமையில் திராவிடர் கழக தலைமை கூட்டத்தில் 15 தீர்மானங்கள் உள்பட சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது .

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, திராவிடர் கழக தலைமை கழக கூட்டத்தில் தந்தை பெரியார் 144 வது ஆண்டு பிறந்தநாள் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று  சிறப்பாக கொண்டாடப்படுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பட ஊர்வலம் ஒலிபெருக்கி வழியில் பெரியார் இசை பாடல்கள் என்கிற வகையில் பெரும் கொள்கை பிரச்சார விழாவாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பெரம்பலூர் மாவட்டம் சிறுகனூரில் பெரியார் உலகம் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள நிலையில் அங்கு சுமார் 150 அடி உயர பெரியார் சிலையை அமைப்பதற்கான பணியை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படக்கூடிய சிறந்த தலைவராக காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி இருப்பதாக பாராட்டினார்.

திராவிடர் கழக சித்தாந்தம் பாஜக சித்தாந்தம் நேர் எதிர் சித்தாந்தம் எனவும் திராவிடர் கழகத்திற்கு எதிராக செயல்படக்கூடிய துணிவு பாஜகவிற்கு இல்லை எனவும் அவர்கள் அரசியல் ரீதியாக திராவிட மாடல் ஆட்சியை தாக்கி அரசியல் செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் ராஜன் மீது செருப்பு வீச்சு குறித்து கருத்து தெரிவித்த அவர், 14 வருடங்களாக சிம்சானத்தில் இருந்த செருப்பை வழிபட்டவர்கள் தான் இவர்கள். அவர்களுக்கு இன்னும் செருப்பு மீதான காதலும் மோகமும் குறையவில்லை அதனால் தான் செருப்பு வீச்சில் பாஜகவினர் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

பாஜக தலைவரான அண்ணாமலை அடித்தால் திருப்பி அடிப்பேன் என ஊடகவியலிடம் அளித்த பேட்டியின் மூலம் அவரது தரத்தை காட்டியுள்ளார். அவர் தலைவர் பதவிக்கு தகுதியானவரா என கேள்வி எழுப்பியவர் சட்டத்தை கையில் எடுத்து தமிழகத்தில் கலவரம் ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம்  பெற வேண்டும் என அவர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கும் அமைச்சர்களுக்கும் தெரியும் என தெரிவித்தார்.

Also see... காணாமல் போன பூனைக்காக காத்திருக்கும் குடும்பம்...

ஆதிதிராவிடர்களுக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் காணக்கூடிய வகையில் இருக்கக்கூடிய சலுகைகளை பறிப்பதற்கான சூழ்ச்சிகள் அன்று தொடங்கி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதனை பாதுகாக்க சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: BJP, K.Veeramani

அடுத்த செய்தி