ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் ஊழியர்களை தாக்கிய நபர்கள், ஒன்றரை லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகத்தில் நேற்று இரவு பத்தரை மணி அளவில் ஒரு குடும்பத்தினர் உணவருந்த வந்துள்ளனர். பிரியாணி சாப்பிட்டு பின் கெட்டுப் போனதாக ஊழியரிடம் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த குடும்பத்தினர் ஜூனியர் குப்பண்ணா உணவக ஊழியர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அருகாமை டேபிளில் சாப்பிட வந்த நபர்களும் தங்களது உணவும் கெட்டுப்போனதாக கூறி இவர்களோடு சேர்ந்து கொண்டு ஜூனியர் குப்பண்ணா ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் போன் செய்து ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களை ஜூனியர் குப்பண்ணா உணவகத்திற்கு வரவழைத்துள்ளனர். அங்கு வந்த நபர்கள் உணவக ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர் தற்போது விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், உணவ ஊழியர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜூனியர் குப்பண்ணா உணவகம் தரப்பிலிருந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திமுக மட்டுமே அறிவுசார்ந்த கட்சியாக நினைத்து கொள்ளாதீர்கள் - உச்ச நீதிமன்றம் காட்டம்
குறிப்பாக பிரச்சனையில் ஈடுபட்டு ஊழியர்களை தாக்கிய இரண்டு டேபிள் நபர்களும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, கறி வகைகள் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் சென்று விட்டதாக ஜூனியர் குப்பண்ணா உணவகம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த மர்ம கும்பல் கெட்டுப்போன பிரியாணி கொடுத்ததற்கு ரூபாய் ஒன்றரை லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியதாகவும் ஜூனியர் குப்பண்ணா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attacked, Briyani attack, CCTV Footage, Hotel