ஹோம் /நியூஸ் /சென்னை /

நீதிமன்றத்தில் பெண்ணிடம் பண்பற்ற கேள்வி எழுப்பிய வக்கீல்.. மன்னிப்பு கேட்ட நீதிபதி..

நீதிமன்றத்தில் பெண்ணிடம் பண்பற்ற கேள்வி எழுப்பிய வக்கீல்.. மன்னிப்பு கேட்ட நீதிபதி..

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது - நீதிபதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தருமபுரி நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணையின் போது, பெண் மனுதாரரிடம், பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி கேட்டதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கோரியுள்ளார்.

  தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், முதல் மனைவியிடம் அநாகரீகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

  வழக்கின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்திலேயே பெண்ணிடம் பண்பற்ற முறையில் கேள்வி கேட்கப்பட்டது நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

  மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என்ற நீதிபதி, தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Chennai High court, Women