ஹோம் /நியூஸ் /சென்னை /

எனக்கு தொப்பை வந்திருச்சு.. கர்ப்பத்தை மறைத்த சிறுமி - திருமணத்துக்கு மறுத்த கேண்டீன் ஊழியர் கைது

எனக்கு தொப்பை வந்திருச்சு.. கர்ப்பத்தை மறைத்த சிறுமி - திருமணத்துக்கு மறுத்த கேண்டீன் ஊழியர் கைது

போக்சோவில் இளைஞர் கைது

போக்சோவில் இளைஞர் கைது

Crime News: சென்னையில் தொப்பை தொப்பையென கூறி மகள் 8 மாத கர்பத்தை மறைத்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சிறுமியை திருமணம் செய்துக்கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார்  கைது செய்தனர்.

  சென்னை ராமாபுரத்தை சேர்ந்த  17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வருகிறார். அப்போது, ராமாபுரம் டி.எல்.ஏ., வளாகத்தில் உள்ள கேன்டீனில் வேலை செய்யும் அம்பூரூஸ்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். நாளடைவில் காதல் பெருகவே திருமணம் செய்துக்கொள்வதாக அம்பூரூஸ் வாக்கு கொடுத்துள்ளார். எனவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் 17 வயது சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.

  இதுகுறித்து அம்பூரூஸிடம் தெரிவித்த போது, யாரிடமும் கூற வேண்டாம், நான் உன்னை கண்டிப்பாக திருமணம் செய்துக் கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதையடுத்து சிறுமியும் வீட்டில் இதைப் பற்றி கூறாமல் இருந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல சிறுமியும் தனக்கு தொப்பை வந்துள்ளதாக அனைவரிடமும் கூறி கர்பமாக இருந்ததை மறைத்து வந்துள்ளார்.

  Read More : பொய் வழக்கால் பெண் தற்கொலை.. திமுகவினரை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்

  இந்நிலையில், கடந்த மாதம் 25 ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தனது தாயாருடன் சின்ன போரூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது, மகள் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தொப்பை தொப்பையென கூறி மகள் 8 மாத கர்பத்தை மறைத்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. சிறுமியின் தாய் சிறுமியிடம் விசாரிக்கவே அவர் அம்பூரூஸ் குறித்து தெரிவித்துள்ளார். தன்னை திருமணம் செய்துக்கொள்வார் எனவும் தாயிடம் சிறுமி கூறியிள்ளார்.

  உடனே சிறுமியின் தாயார் அம்பூரூஸிற்கு போன் செய்து கேட்ட போது, திருமணம் செய்ய முடியாது என, மறுத்துள்ளார் அம்பூரூஸ்.  இதனைக் கேட்டு மேலும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயாருக்கு தன் மகளை அம்பூரூஸ் ஏமாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 30 ம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

  Also Read: மாயமான இளைஞர்..கால்வாயில் கிடந்த பைக்.. வீட்டினுள் புதைக்கப்பட்ட சடலம் - பாபநாசம் பட பாணியில் அரங்கேறிய கொலை

  இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து வளசரவாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், அம்பூரூஸை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: சோமசுந்தரம்

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Chennai, Sexual abuse