ஹோம் /நியூஸ் /சென்னை /

மனித சங்கிலிக்கு தடை.. தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துக்கு உதவுவதுபோல் உள்ளது: சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்

மனித சங்கிலிக்கு தடை.. தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துக்கு உதவுவதுபோல் உள்ளது: சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்

கே. பாலகிருஷ்ணன்

கே. பாலகிருஷ்ணன்

Marxist-Communist-Party-Balakrishnan தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துக்கு உதவுகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்கக் கூடாது. தமிழக அரசிடம் மீண்டும் அனுமதி கேட்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து நடத்துவதாக இருந்த மதசார்பற்ற மதநல்லிணக்க மனித சங்கிலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துக்கு உதவுவது போல் உள்ளதாக தெரிவித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ண,  தமிழக அரசிடம் மீண்டும் அனுமதி கேட்போம் எனவும் தெரிவித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து மதசார்பற்ற மதநல்லிணக்க மனித சங்கிலியும் நடத்துவதாக இருந்தது. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காட்டி இவ்விரு நிகழ்வுகளுக்கும் தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு  பேட்டியளித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கும் மதசார்பற்ற மதநல்லிணக்க மனித சங்கிலிக்கும் தமிழக அரசு ஒன்றாக தடை விதித்திருப்பது ஆர்.எஸ்.எஸ். நோக்கத்துக்கு தமிழக அரசு உதவி செய்வது போல் இருக்கிறது.

உங்கள் ஆவணங்களில் மதசார்பற்ற சக்திகள் என்று கூறுகிறீர்கள். மதநல்லிணக்கத்துக்கான மனித சங்கிலி என்று கூறுகிறீர்கள். பிறகு ஏன் தடை? ஆர்.எஸ்.எஸ். நோக்கமே இது தான். காந்தி ஜெயந்தி அன்று அமைதியாக இருக்க வேண்டும். கொண்டாட கூடாது என்பது தான் நோக்கம். தமிழக அரசு செய்துள்ளதை பார்த்தால் அவர்கள் நோக்கத்துக்கு உதவி புரிவது போல் உள்ளது.

எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி , காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை சம நேர்கோட்டில் வைத்து பார்ப்பது பொருத்தமற்றது. காந்தியின் நோக்கங்களை வலியுறுத்த, ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த இதுபோன்ற இயக்கங்கள் தேவை.

இதையும் படிங்க: பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பாரபட்சம் கூடாது... சனாதனப் பயங்கரவாத அமைப்புகளையும் தடை செய்க - தொல்.திருமாவளவன்

இது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க கூடாது. தத்துவார்த்த ரீதியில் மக்கள் மத்தியில் கருத்து போராட்டம் நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும். மீண்டும் தமிழக அரசு மற்றும் காவ்லதுறையை சந்தித்து மனித சங்கிலியை நடத்துவோம். ஆர்.எஸ்.எஸ்.நடவடிக்கையை சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று பார்க்கலாம். மதநல்லிணக்க மனித சங்கிலியில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரப்போகிறது?

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடக்கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் மயான அமைதியாக இருந்தால் அது தான் ஆர்.எஸ்.எஸ். நோக்கமாகும். காந்தி ஜெயந்தியை கூட கொண்டாட வழி இல்லை என்றால் எப்படி? தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும். எல்லார் மீதும் ஏன்’ என்று கேள்வி எழுப்பினார்.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Marxist Communist Party, RSS, Tamilnadu government