முகப்பு /செய்தி /சென்னை / ‘அம்மா நான் போறேன்... உடம்ப பாத்துக்கோங்க..’ - வேலை இழப்பால் கடிதம் எழுதி ஐடி ஊழியர் தற்கொலை

‘அம்மா நான் போறேன்... உடம்ப பாத்துக்கோங்க..’ - வேலை இழப்பால் கடிதம் எழுதி ஐடி ஊழியர் தற்கொலை

மாதிரி படம்

மாதிரி படம்

தனது முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும், மீண்டும் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை பாடி டிவிஎஸ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(24 வயது). பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் இவர் பணியாற்றிய நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, விக்னேஷின் வேலை பறிபோனது. இதனால், கடந்த ஒரு மாதமாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக, குடும்பத்தினர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை செய்தவற்கு முன்பு அவர் எழுதி வைத்த கடிதமும் கிடைத்துள்ளது.

அதில், தனது முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை என்றும், மீண்டும் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னை மன்னித்து மறந்துட வேண்டும் என்றும், ‘அம்மா நான் போறேன்... உடம்ப பாத்துக்கோங்க..’ என்றும் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். அத்துடன் தனது ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் பார்ஸ்வேர்டுகளையும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Chennai