Home /News /chennai /

குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆராய்ச்சி மையம் 2 ஆண்டுகளில் தயாராக இருக்கும்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்

குலசேகரப்பட்டினம் விண்வெளி ஆராய்ச்சி மையம் 2 ஆண்டுகளில் தயாராக இருக்கும்.. இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இன்னும் 2 ஆண்டுகளில் குலசேகரபட்டினம் விண்வெளி ஆராய்ச்சி மையம் தயார் நிலையில் இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India
    முதல் முறையாக சமஸ்கிருத மொழியில் படமாக்கப்பட்டுள்ள அறிவியல் படமான ‘யானம்’ திரைப்படம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரையரங்கில் வெளியிடப்பட்டது. இஸ்ரோ தலைவராக இருந்த ராதாகிருஷ்ணனின் வாழ்வியல் குறித்து, இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில், செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் ராக்கெட் செலுத்தும் போது சந்தித்த சவால்கள் குறித்து பேசப்பட்டுள்ளது

    . வினோத் மன்காரா இயக்கிய இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் நியூஸ் 18க்கு பேட்டியளித்த அவர், சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, எஸ்.எஸ்.எல்.வி.டி. 2 உள்ளிட்ட ராக்கெட்டுகள் விரைவில் விண்ணில் ஏவப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    தமிழ்நாட்டில் குலசேகரப்பட்டினத்தில் அமைய இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அமைவிடத்தை, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக பார்வையிட்டதாக கூறிய சோம்நாத், அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அது முடிந்த உடனேயே கட்டுமான பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்தார்.

    கட்டுமான பணிகள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் நிறைவடைந்து, அங்கே விண்வெளி ஆராய்ச்சி மையம் இரண்டு ஆண்டுகளில் தயார் நிலையில் இருக்கும் எனவும் இஸ்ரோ தலைவர் கூறினார்.

    இந்நிலையில், யானம் திரைப்படம் சம்ஸ்கிருத மொழியில் வெளியானது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், சமஸ்கிருத மொழி சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது என்றும், பல்வேறு அறிவியல் சார்ந்த பதிவுகளை சமஸ்கிருதம் பதிவிட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமஸ்கிருத மொழியில் இருந்து திராவிட ஆரிய மொழிகள் தோன்றி உள்ளன. குறிப்பாக நம் எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியைப் போலவே காணப்படும் அந்த தொடர்பை நாம் விட்டுவிட கூடாது. எனவே சமஸ்கிருத மொழியை முன்னிறுத்தி செல்ல வேண்டும் எனக் கூறினார்.

    Must Read : தனியார் பால் விலை உயர்வு.. ஆவின் பால் விற்பனை அதிகரிப்பு

    சமஸ்கிருதம் ஒரு அறிவியல் மொழியா என்ற கேள்விக்கு?, குறிப்பாக நாம் அறிவியலை தமிழ்-மலையாளம், ரஷ்யா உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் கற்று வருகிறோம் எனவே சமஸ்கிருதம் மொழியிலும் கற்க முடியும் எனக் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: ISRO, Thoothukudi

    அடுத்த செய்தி