காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த E-Commerce மற்றும் Delivery நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவது அவசியம் என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sustainable Mobility Network மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் நியமிக்கப்பட்ட CMSR எனும் ஆலோசனைக் குழு அண்மையில் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இக்கணக்கெடுப்பின் முடிவானது காற்று மாசு மற்றும் கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்து முழுவதையும் மின் வாகனப் பயன்பாட்டிற்கு மாறவேண்டும் என்கின்ற கோரிக்கை சென்னை மக்களிடம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. மேலும் மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய ஐந்து பெரு நகரங்களைச் சேர்ந்த 9048 வாடிக்கையாளர்களிடம் எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கேட்பில் சென்னையில் மட்டும் 1508 நபர்களிடம் விநியோக நிறுவனங்களின் மின்வாகன மாற்றுத் திட்டங்கள் குறித்து அவர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:
உங்கள் நகரத்திலிருந்து(சென்னை)
டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 78% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரி வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன என்பதை உணர்ந்துள்ளார்கள்.
சென்னை, டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் பெங்களூர் முழுவதும் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பார்சல் டெலிவரி சேவைகள் சார்ந்த 9048 நுகர்வோரிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
சென்னையில் உள்ள 86% நுகர்வோர்கள் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவது, பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.
சென்னையில் உள்ள 89% நுகர்வோர் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கு காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.
80% சென்னையில் உள்ள நுகர்வோர் கடைசி மைல் டெலிவரிக்கு பயன்படுத்தும் வாகனங்கள் காற்று மாசுபாட்டிற்கு பங்களிப்பதாக உணர்கிறார்கள்.
சென்னையில் உள்ள 8% நுகர்வோர் டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி டெலிவரி எடுக்க முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
சென்னையில் உள்ள 70% டெலிவரி நிறுவனங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.
78% டெல்லிவாசிகள், டெல்லி அரசு தனது வரைவு ஒப்பந்தத்தில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயித்த இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.
65% மும்பை மக்களும் 78% புனே மக்ககளும், மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அதன் மின்வாகன கொள்கையில் டெலிவரி நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதாக உறுதியளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள்.
64% நுகர்வோர், டெலிவரி நிறுவனங்கள் தங்கள் போக்குவரத்தை மின்சார வாகனங்களுக்கு மாற்றும் செயலில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறார்கள்.
12% நுகர்வோர் மட்டுமே விநியோக நிறுவனங்கள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி பொருட்கள் விநியோகிக்கும் முயற்சிகள் செய்வதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள்.
93% நுகர்வோர் கடைசி மைல் டெலிவரியில் ஒரு பெரிய நிறுவனம் மின்சார வாகனங்களுக்கு மாறுவதால், பெரும் மாற்றத்தை உருவாக்கி மற்ற நிறுவனங்களையும் அவ்வாறு செய்ய வைக்க உதவும் என நம்புகிறார்கள்.
டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 67% நுகர்வோர்கள் இ-காமர்ஸ், உணவு, மளிகை பொருட்கள் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் காற்று மாசுபாட்டை குறைக்க மின்சார வாகனகளுக்கு மாறுவது "மிகவும் முக்கியமானது" என நம்புகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.