ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் விடிய விடிய கனமழை.. ஏரி, குளங்களில் நீர் மட்டத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னையில் விடிய விடிய கனமழை.. ஏரி, குளங்களில் நீர் மட்டத்தை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்

சென்னையில் கனமழை

சென்னையில் கனமழை

ஏரிகள், குளங்களில் உள்ள நீர் இருப்பின் முழு கொள்ளளவில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர் மட்டத்தை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளத்து.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இரவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.மேலும், இன்று சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  மேலும், கனமழை பாதிப்பை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் உஷார் நிலையில் உள்ளது. மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் கொள்ளவை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு முதல் மூன்று அடி வரை நீர் மட்டத்தை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய ஏரிகளை தவிர்த்து, மற்ற ஏரிகள், குளங்களில் உள்ள நீர் இருப்பின் முழு கொள்ளளவில் இரண்டு முதல் மூன்று அடி வரை நீர் மட்டத்தை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளத்து.

  சென்னை மாநகராட்சி கட்டுபாட்டில் உள்ள 16 சுரங்க பாதைகளில் வில்லிவாக்கம் சுரங்க பாதையில் மட்டுமே மழை நீர் தேங்கியுள்ளது. அதிகம் தேங்கும் கணேசபுரம், ரெங்கராஜ புரம் சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்க வில்லையென மாநகராட்சி தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: தமிழகத்தில் 28 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

  சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியில் நீர்வரத்து வினாடிக்கு 558 கன அடியாகவும் நீர் வெளிற்றம் வினாடிக்கு 100 கன அடியாக உள்ளது.சோழவரம் ஏரியில் நீர் வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து வினாடிக்கு 330 கன அடியாகவும் நீர் வெளிற்றம் வினாடிக்கு 539 கன அடியாகவும் உள்ளது.பூண்டி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 290 கன அடியாக உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Chennai, Chennai rains, Heavy Rainfall