ஹோம் /நியூஸ் /சென்னை /

சென்னையில் தனியார் கல்லூரி கட்டிடங்களுக்கு சொத்து வரி உயர்வு - மாநகராட்சி தீர்மானம்

சென்னையில் தனியார் கல்லூரி கட்டிடங்களுக்கு சொத்து வரி உயர்வு - மாநகராட்சி தீர்மானம்

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி

chennai corporation | கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சொத்து வரியினை மேல்வரியினை இணைத்து சொத்து வரி உயர்வு காரணி அடிப்படையில் 2022 - 2023 முதல் நடைமுறை படுத்தப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தனியார் கல்லூரி கட்டிடங்களுக்கு முந்தைய குடியிருப்பு அடிப்படை தெரு கட்டணத்தில் இருந்து 1.6 மடங்கு கூடுதலாக சொத்து வரி விதிப்பை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிப்பில் 60% மேல்வரியினை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தன. இதனால் நீதிமன்றம் இம்முறைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்நிலையில், மாநகராட்சியின் வரி வருவாயை கருத்தில் கொண்டு கல்வி நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தனியார் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் அரசு உதவி பெற்று இயங்கும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு தற்போது குடியிருப்பு தெரு கட்டணத்தில் விதிக்கப்படும் சொத்து வரியுடன் கூடுதலாக 60% மிகைவரி விதிக்கப்படுவதற்கு பதிலாக குடியிருப்பு அடிப்படை தெரு கட்டணத்தில் கூடுதலாக 1.6 மடங்கு என சொத்து வரி விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல்.. காதலால் குணமான நோய்..! மருத்துவமனையிலேயே நாளை இருவருக்கும் டும்.. டும்..!

ஏற்கனவே மிகை வரி விதிக்கப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிதியுதவி பெற்று இயங்கும் கல்வி நிறுவன மதிப்பீடுகளுக்கு சொத்துவரி சீராய்வின்போது மிகைவரியினை நீக்கி அதனை சொத்து வரி கணக்கில் கொண்டு வர சொத்துவரி சீராய்வினை நடப்பு நிதி ஆண்டின் முதலாம் அரையாண்டில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சொத்து வரியினை மேல்வரியினை இணைத்து சொத்து வரி உயர்வு காரணி அடிப்படையில் 2022 - 2023 முதல் நடைமுறை படுத்தப்பட வேண்டும். அதன்படி மேல்வரி நீக்கம் செய்யப்பட்டதால் 2017 - 2018 முதல் 2021 - 2022 வரை மட்டுமே மேல்வரி உள்ளது. இதனை கணிணி வாயிலாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பேருந்தில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி : படிக்கட்டில் பயணம் செய்தபோது நேர்ந்த விபரீதம்!

மாமன்ற தீர்மானத்தின் படி தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்வி நிறுவனங்களில் சுயநிதி அடிப்படையில் செயல்படும் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கும் முந்தைய குடியிருப்பு அடிப்படை தெரு கட்டணத்தில் 1.6 மடங்கு என சொத்து வரி விதித்து நடப்பு நிதியாண்டின் முதலாம் அரையாண்டு முதல் சீராய்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Chennai, Chennai corporation