Home /News /chennai /

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு - சென்னை, வேலூரில் 60 இடங்களில் அதிரடி சோதனை

பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் ஐடி ரெய்டு - சென்னை, வேலூரில் 60 இடங்களில் அதிரடி சோதனை

தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்

தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம்

Chennai | பிரபல தோல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களான கே ஹெச் குரூப்(KH Group) நிறுவனங்கள் மற்றும்  ஃபரிதா தோல்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியாவின் மிகப்பெரிய தோல் பொருட்கள் தயாரிப்பு மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி நிறுவனமான கே.எச்.குரூப் தலைமை அலுவலகம் மற்றும் அதன் தொடர்புடைய சென்னை, வேலூர், பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

குறிப்பாக 1947 ஆம் ஆண்டு கிசார் ஹுசைன் என்பவரால் கே.எச் குரூப் தொழிற்சாலை ராணிப்பேட்டையில் நிறுவப்பட்டது. அதே போன்று 1985 ம் ஆண்டு Rabia Leather Industries Private Limited என்ற கிளை நிறுவனம் தொடங்கப்பட்டு பின்பு 2013 ஆம் ஆண்டு K.H Exports India Private Limited பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பின் அடுத்தடுத்து கிளைகளான KH ஷூஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் MA Khizar Hussain & Sons ஆகியவையும் பின்வந்த ஆண்டுகளில் KH Arind Private Limited, KH எக்ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் KH எக்ஸ்போர்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டன.

மொத்தமாக இந்த கே.எச் குரூப் தோல்பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு 20 மில்லியன் சதுர அடி தோல் பதனிடுதல், 3 மில்லியன் ஜோடி காலணிகள், 9 லட்சம் தோல் பைகள், 3 மில்லியன் சிறிய தோல் பொருட்கள்,  2 மில்லியன் கையுறை ஆகியவற்றை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த நிறுவனங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி உள்ளது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை மறைத்து நிறைய இடங்களில் சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் வாங்கி இருப்பதும் பல தனியார் நிறுவனங்களை தன்னுடன் இணைத்து தோல் பொருட்கள் தயாரித்து வந்ததும், அப்படி தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் வருமானத்தை குறைத்துக் காட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.



இதன் அடிப்படையில் இன்று காலை முதல் கே.எச் குரூப் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனமான ஃபரிதா லெதர் கம்பெனி என சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, பாண்டிச்சேரி உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Also see... ஜெயலலிதா இறப்புக்கு என்ன காரணம் - AIIMS மருத்துவ குழு அறிக்கையில் முக்கிய தகவல்கள்

குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள கே.எச் குரூப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஆறு மணியிலிருந்து இந்த சோதனை ஆரம்பித்துள்ளது. சென்னையில் கே.எச் குரூப்பின் தலைமை அலுவலகம், ராமாபுரத்தில் உள்ள அலுவலகம் மற்றும் அதன் நிறுவனங்களிலும் மண்ணடியில்  பெரியண்ண மேஸ்திரி தெருவில் உள்ள ஃபரிதா லெதர் கம்பெனியிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.



முழுமையான சோதனைகளுக்குப் பிறகே எவ்வளவு வருமானத்தை மறைத்து காட்டியுள்ளார்கள்? எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்பது தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chennai, Income Tax raid

அடுத்த செய்தி