ஹோம் /நியூஸ் /சென்னை /

நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார்.. சென்னை மேயர் பிரியா தகவல்!

நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே ரோப்கார்.. சென்னை மேயர் பிரியா தகவல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று ரோப்கார் திட்டத்தை நடைமுறைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ‘மாதாந்திர மாமன்ற கூட்டம்’ ரிப்பன் மாளிகையில் வெள்ளி அன்று நடைபெற்றது. அதற்கு முன்னதாக நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினருக்கான தேர்தல், மாநகராட்சி ஆணையரும்/ தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்த 68 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமுதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

நேற்றைய மாமன்ற கூட்டத்தில் மொத்தமாக 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்....

ஆரம்ப சுகாதார மையங்கள்:   மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக 37 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 5 நகர்ப்புற சமுதாய நல்வாழ்வு மையங்களின் பெயர்களை திருத்தி அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சமூக ஊடகங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும்- அரசு உத்தரவு!

நகர்புற சுகாதார மையங்கள் அந்தந்த பகுதிகளின் பெயர்களை கொண்டு செயல்படும் வகையிலும் ஒரே பகுதியின் பெயரை இரண்டிற்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் அழைக்கப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அம்மா உணவகம்:  கரூர் வைசியா வங்கியின் மூலம் அம்மா உணவக தினசரி விற்பனைத் தொகையை வசூலிப்பதற்கான ஒப்பந்தத்தினை நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அக்டோபர் 1 . 2022 முதல் செப்டம்பர் 30. 2023 வரை விற்பனைத் தொகை கரூர் வைசியா வங்கியின் மூலம் வசூலிக்கப்பட இருக்கிறது.

மல்டி மாடல் வசதி:

சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிராட்வே பேருந்து நிலையத்தில் மல்டி மாடல் வசதி வளாகத்தை மேம்படுத்துவதற்கான பணிக்கான நிர்வாக அனுமதி அரசிடம் கோரும் தீர்மானமும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார கட்டமைப்பை உறுதி செய்யும் வகையில் மூன்று மண்டலங்களில் 372 இடங்களில் 429.73 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் நவீன கட்டணக் கழிப்பறைகள் அமைப்பதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி கல்வி நிறுவன கட்டடங்களுக்கு 1.6 மடங்கு வரி நிர்ணயம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லா நேரத்தில் பல்வேறு பொருட்கள் தொடர்பாக மாமன்ற உறுப்பினர்கள் விவாதித்திட்டனர்.

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

பிரச்சனைக்குரிய இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. மழை காலம் நெருங்கியுள்ள நிலையில் சகதிகள் ஏற்படும் மற்றும் விபத்தை தவிர்க்கும் விதமாக மிகப்பெரிய அளவிலான மழைநீர் வடிகால் பணிகள் மட்டும் புதிதாக தொடங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசரமான பணிகள் முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளலாம். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு தடுப்புகள் பச்சை நிற துணி அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பேசினார்.

அதிகாரிகள் இடமாற்றம், அம்மா உணவக ஊழியர்கள் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக கேள்வி எழுப்பிய 138 வார்டு மாமன்ற உறுப்பினர் கண்ணன்க்கு பதிலளித்து பேசிய மாநகரட்சி மேயர் பிரியா, “சென்னையில் 200 வார்டுகளிலும் உள்ள அனைத்து மாநகராட்சி அதிகாரிகளும் ஏதோவொரு மழை நீர் வடிகால் பணியில் பங்கு வகிக்கின்றனர்.மழைக்காலம் முடிந்த பின்னர் ஜனவரி மாதத்தில் வார்டு வாரியாக அதிகாரிகளை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

முறைகேடுகளை தவிற்கும் வகையில் அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் டோக்கன் மாநகராட்சி சார்பில் இனி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அம்மா உணவக பணியாளர்கள் தவறு செய்தால் மொத்த குழு மீதும் நடவடிக்கை எடுக்க தேவையில்லை. சம்மந்தப்பட்ட நபர் மீது மண்டல அலுவலர் / அம்மா உணவக டிஆர்ஓ விடம் கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

ரோப்கார்:

101 வது வார்டு உறுப்பினர் செம்மொழி, மெரினா கடற்கரையை ஒட்டி நேப்பியர் பாலம் - கலங்கரை விளக்கம் ரோப்கார் போடும் திட்டத்தை முன்வைத்தார். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று ரோப்கார் திட்டத்தை நடைமுறைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

மாமன்றத்தில் பேசிய துணை மேயர் மகேஷ்குமார் , “பல நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு மழைநீர் வடிகல் பணி குறுகிய காலத்தில் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. புதிய மழைநீர் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த வாரம் இரவு பெய்த மழைநீர் உடனடியாக வடிந்ததை பார்க்க முடிந்தது” என்றார்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Chennai corporation, Chennai Mayor, Marina Beach