Home /News /chennai /

உஷார்.. போரூர் பைபாஸில் பாலியல் தொழிலாளியை வைத்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி..

உஷார்.. போரூர் பைபாஸில் பாலியல் தொழிலாளியை வைத்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி..

போரூர் பைபாஸில் பாலியல் தொழிலாளியை வைத்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி..

போரூர் பைபாஸில் பாலியல் தொழிலாளியை வைத்து வாகன ஓட்டிகளிடம் வழிப்பறி..

மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும்  பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பேரூர் அருகே பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வைத்து கார் ஓட்டுநரிடம் பணம் பறித்த 4 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.  

    சென்னை போரூர் பைபாஸ் சாலையில் நேற்று இரவு 1 மணியளவில்  பாலியல் தொழில் செய்யும் இளம்பெண் ஒருவர் சாலையோரம் தன்னை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த நபருடன் நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல், அந்த நபரை அடித்து விரட்டி விட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

    அதன் பின்பு அந்த பெண்ணை கத்தியைய் காட்டி மிரட்டி பைபாஸில் வரும் ஏதாவது ஒரு காரை கைக்காட்டி நிறுத்தும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்த பெண்ணும் அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்பதுபோல், கேட்டு ஏறியுள்ளார்.

    அப்போது, அவர் காரில் ஏறியதும் மறைந்திருந்த இந்த நான்கு போரும் அந்த காரில் ஏறி ஓட்டுநரின் கழுத்தில் கத்தி வைத்துள்ளனர். தொடர்ந்து, ஓட்டுநரை மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்த அந்த கும்பலை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் கண்டு வாகனத்தை நிறுத்தி சத்தம் போட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போரூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெண்ணை விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையடுத்து, அந்த பெண்ணை பத்திரமாக ஆவடி கமிஷனர் அலுவலகம் அனுப்பி வைத்து அங்கிருந்து அவருடைய பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக போரூர் காவல் நிலையத்தில் எந்த ஒரு புகாரும்  பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்ட நபர்களை போரூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Chennai, Porur

    அடுத்த செய்தி