சென்னை தியாகராய நகரில் தனியார் பார் ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹூக்கா போதை விருந்து விடிய விடிய நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் பிரபலமான ஹூக்கா பார்கள், சென்னையிலும் சில ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகின்றன. இது போன்ற பார்களில் மேஜைமீது வைக்கப்பட்டிருக்கும் உயரமான கண்ணாடிக் குவளைக்குள் போதை பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். அதில் பொருத்தப்பட்டிருக்கும் நீளமான குழாய்களை உறிஞ்சினால் ஒருவிதமான போதை ஏற்படும். உணவகங்கள் என்ற பெயரில் மறைமுகமாக செயல்பட்டு வரும் இந்த ஹூக்கா போதைப் பொருள் உபயோகிக்க தடை தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பார் ஒன்றில் விடிய விடிய போதை விருந்து நடைபெற்று வந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹூக்கா போதை வஸ்தை புகைத்தும், மது அருந்தியும் உற்சாகமாக நடனமாடியுள்ளனர். இந்த பாரில் ஒரு நபருக்கு நுழைவு கட்டணமாக 2500 முதல் 3000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
ஒவ்வொரு வார இறுதி நாளிலும் இந்த ஹூக்கா போதை விருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. ஐ.டி. உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளிட்டோர் தடை செய்யப்பட்ட இந்த ஹூக்கா போதைப் பொருளை பயன்படுத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சனிக்கிழமை மாலை துவங்கிய இந்த தடை செய்யப்பட்ட போதை விருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரையும் விடிய விடிய பல வண்ண விளக்குகள் ஜொலிக்க நடைபெற்றுள்ளது. போலீசார் உரிய சோதனை நடத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தடையை மீறி போதை விருந்து நடத்தும் பார்களின் உரிமையை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News